செய்திகள் :

"கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம்

post image

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.

“சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார். இன்னொரு எம்எல்ஏ ‘திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது’ எனப் பேசுகிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இவ்வளவு நாட்களாக இதே மக்கள்தான் இவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். இதைப்போல் பேசிப் பேசித்தான் சட்டப்பேரவையில் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் சட்டமன்ற பேச்சு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "Take Diversion அரசு! கோயபல்ஸ் முகம் என்ன என்பதை மாண்புமிகு முதலமைச்சர் இன்றைய சட்டமன்றத்தில் காட்டியுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தனது துறை மீதான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், எப்படி Take Diversion நாடகத்தை நடத்தினார் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?அவைக் காவலர்கள்அவை எப்போதுமே சுமூகம... மேலும் பார்க்க

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன்,... மேலும் பார்க்க