செய்திகள் :

கே.பாக்யராஜுக்கு விழா... புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்! - பின்னணி என்ன?

post image

மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோருக்கு, பெப்சி உள்ளிட்ட திரையுலகத்தினர் நடத்தும் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்.

இந்தச் சங்கத்தின் தலைவராகத்தான் இறப்பதற்கு முன்பு வரை இருந்தார் பாக்யராஜ். சமீபத்தில் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி தலைவர் ஆர்.கே, செல்வமணி ஆகியோரின் ஆதரவுடன் வி.சி.குகநாதன் தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் சேரன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டதில், தலைவர், செயலாளர், பொருளாளர். துனைத் தலைவர்கள், மற்றும் இணைச் செயலாளர் பதவியில் ஓர் இடத்தை சேரன் அணி வெல்ல, மூன்று இணைச் செயலாளர்கள் பதவியிடங்களையும் 12 செயற்குழு உறுப்பினர்களில் 8 இடங்களையும் குகநாதன் அணி வென்றது.

ஆக மொத்தமுள்ள 21 இடங்களில் 10 பதவிகளை சேரன் அணியும் 11 இடங்களை குகநாதன் அணியும் வென்றன.

cheran

இந்தப் பின்னணியில்தான் தற்போது பெப்சியின் விழாவை சங்கம் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ரவி மரியாவை எழுத்தாளர் சங்கத்தின் பிரதிநிதியாக பெப்சி தரப்பு அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றிருக்கிறார் சங்கத்தின் தலைவர் சேரன்.

மேலும் இது தொடர்பான சங்க அறிக்கையில் அவர்,

`விழாவில் கலந்து கொள்ள பல வகையில் முயன்றும் எங்களது உணர்வுகள் மதிக்கப் படாததால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. சங்க உறுப்பினர்களின் சுயமரியாதையைக் காக்கும் பொருட்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

வரும் காலங்களிலாவது தாய் அமைப்பான பெப்சி எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேன்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்' என்க் குறிப்பிட்டிருக்கிறார்.

Sony Vizha: தமிழ் பொழுதுபோக்கு சேனல்களுக்கு புது போட்டி - ரஹ்மான், சமந்தாவுடன் களமிறங்கும் சோனி விழா

தமிழ் தொலைக்காட்சி உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முன்னணி ஒளிபரப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), தமிழில் 'சோனி விழா' (Sony VIZHA) என்ற புதிய பொழுதுபோக்கு சே... மேலும் பார்க்க

"மோசமான படம்" என்ற பட்டமே வைரல் விளம்பரமானது - ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடி வசூல்!

‘இந்தப் படம் நல்லா இருக்காம்... டிக்கெட் போடு!’ என்று சொல்வதைத்தான் இதுவரை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சீனாவில் ஒரு படத்துக்கு நிலைமை அப்படியே தலைகீழ் ‘படம் படுமோசமாம்’... அப்படி என்னதான் மோசமாக இரு... மேலும் பார்க்க

'இதயம்' முரளி படத்திற்கு முன்னோடி! – வாய்விட்டுச் சொல்லாத காதலின் வலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

BTS ரசிகர்களுக்கு ஒரு Shock… `கேட்கும் திறன் குறைபாடு' - பாடகர் V பகிர்ந்த தகவல்!

BTS ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்! உலகப் புகழ்பெற்ற K-pop குழுவான BTS-ன் பாடகர் V, தனக்கு ஒரு காதில் கேட்கும் திறன் குறைபாடு இருப்பதாக முதன்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.V எனும் மேடைப் பெயரால்... மேலும் பார்க்க

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவத... மேலும் பார்க்க