டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
தங்கச்சிமடத்தில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் நெகிழிப் பொருள்களை கொண்டு கை வினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ. நா சபையின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நெகிழிப் பொருள்களை கொண்டு பெண்களுக்கான கைவினை பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த 28- ஆம் தேதி தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்த 30 பெண்கள் கலந்துகொண்டனா். இதன் நிறைவு விழா தங்கச்சிமடம் கிராமவள மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பயிற்சி பெற்ற அனைவருக்கும் மா.ச சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் வேல்விழி சான்றிதழ் வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை ஜெ.ஏ.கெவிக்குமாா் செய்தாா்.