செய்திகள் :

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

post image

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர்.

செந்தில் பாலாஜி

திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அண்மையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. விரைவில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளது. பல முக்கிய அறிவுப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்து கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது. 

கோவை

பவர் சென்டர்

கொங்கு மண்டல அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய பவர் சென்டர். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

எஸ்.பி வேலுமணி

ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும். இது வரலாறு. அதேநேரத்தில் நாம் திமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. கோட்டையில் ஓட்டை போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் சம்மட்டியுடன் தயாராக இருக்கிறார்கள்.

மாயை

கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால்  தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை.

தவெக தலைவர் விஜய்

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள்.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 தெருமுனை கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. கோவைக்கு அத்தனை திட்டங்களையும் அதிமுக தான் நிறைவேற்றியுள்ளோம்.

வேலுமணி
வேலுமணி

திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும். அதுதான் நம் லட்சியம்” என்றார்.

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரண... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் நமாஸ் செய்ய முயற்சி: காஷ்மீர் நபரின் செயலால் அதிர்ச்சி!

அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில்தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேற்று ஒர... மேலும் பார்க்க

அடம் பிடிக்கும் ட்ரம்ப்; நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ - எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி!

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவை வலுப்படுத்த டிரம்ப் போன்ற ஒருவருக்குகூட ஆதரவளிக்க தயங்க மாட்டேன்'- ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தேர்தல் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரது கட்சியும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து ப... மேலும் பார்க்க

கோவை: `திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'- பாஜக செயல் தலைவர் நிதின் நபின் சபதம்

பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜ... மேலும் பார்க்க