தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் ...
அடம் பிடிக்கும் ட்ரம்ப்; நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ - எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி!
தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார்.
அடம் பிடிக்கும் ட்ரம்ப்
சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், " இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன்.
என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது" என்று பேசியிருந்தார்.

நோபல் பரிசை பகிர நினைக்கும் மச்சாடோ
இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
மச்சாடோவின் பதிவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "எனக்குக் கிடைத்த இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனவரி 3-ம் தேதி (மதுரோ பிடிபட்ட நாள்) வரலாற்றில் நீதிக்காகக் கொடுங்கோன்மை வீழ்ந்த நாளாகக் குறிக்கப்படும்.
இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மதுரோ சிறைபிடிக்கப்பட்டபோது, "சுதந்திரத்தின் மணி ஒலித்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி
இந்நிலையில் தனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறிய மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
அதாவது, “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை" என்று மச்சாடோவின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நோபல் கமிட்டி.


















