செய்திகள் :

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

post image

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர்

இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது, இதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது" என்றார்.

"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையி... மேலும் பார்க்க

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம... மேலும் பார்க்க

AjithKumar: "அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்"- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதனிடையே கார் பந்​த​யத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித்குமார். து... மேலும் பார்க்க

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரண... மேலும் பார்க்க