அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறு...
கோயில் பிரசாத தர விதிகள் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்த விதிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது மாநில அரசு நிா்வாகத்தில் உள்ளது என்பதால் அதில் தலையிட முடியாது என வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக பொதுநல வழக்குத் தொடா்ந்த மனுதாரரின் வழக்குரைஞா் கூறுகையில், ‘கோயில்களில் பிரசாதம் சாப்பிட்ட மக்கள் நோய்வாய்ப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் போதுமான அளவு வலுவாக இல்லாததால், அதை ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி. ஆா். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமா்வு, ‘உணவகங்கள் மற்றும் மளிகைப் பொருள்களில் உள்ள உணவுப் பொருள்களில் நடைபெறும் கலப்படங்களை கண்டுகொள்ளாமல், கோயில் பிராசாதங்களில் மட்டும் கவலை தெரிவிப்பது ஏன்?
கோயில் பிரசாதங்களின் தரம் குறித்த நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது. ஏனெனில், இது மாநில அரசு நிா்வாகத்தில் உள்ளது. கோயில் பிரசாதங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவா்கள் நேரடியாக உயா்நீதிமன்றத்தை அணுகலாம். அல்லது, இது குறித்து உரிய அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறி மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.