"தமிழ்நாட்டில் தங்க நாணயம் விற்பனை இல்லை; நகை சீட்டும் கிடையாது" - நகை வியாபாரிக...
கோலியின் கேட்ச்சை விட்டதுதான் தோல்விக்குக் காரணம்! – கேப்டன் அஜிங்க்யா ரஹானே வருத்தம்!!
ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 13) பரபரப்பான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய பெங்களூரு அணி, விராட் கோலியின் அதிரடியால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்குப் பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தோல்வி குறித்து அஜிங்க்யா ரஹானே பேசியவை: "இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் என்பது ஒரு சவாலான ஸ்கோர் தான். நடு ஓவர்களில் விளையாடிய பேட்டர்களும் இது ஒரு நல்ல இலக்கு என்றே சொன்னார்கள். ஆட்டம் முடிந்த பிறகு, இன்னும் சில ரன்கள் எடுத்திருக்கலாம் என்று பேசுவது எளிது, ஆனால் எங்கள் பேட்டர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.
கடந்த சில போட்டிகளாக எங்கள் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால், விராட் கோலி கேட்ச்சை நழுவ விடுவது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை அந்த கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.

தொடக்கத்தில் பேட்டிங் செய்ய பிட்ச் எளிதாக இருந்தது. ஆனால், நடு ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள் என்று நம்பினோம். விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இடையிலான அந்தப் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே மாற்றியது. விராட் கோலி எவ்வளவு ஆபத்தான வீரர் என்பது நமக்குத் தெரியும். சில நேரங்களில் போட்டிகளில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இயல்புதான். பந்துவீச்சைப் பொறுத்தவரை, கார்த்திக் தியாகி செயல்படும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் தெளிவான மனநிலையுடன் பந்துவீசுகிறார், இது அணிக்கு ஒரு நல்ல விஷயம்," என அவர் தெரிவித்தார்.

















