செய்திகள் :

கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்

post image

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகதான் வென்றது.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் களப்பணியும் அவர்களுக்குப் பெரியளவுக்கு கைக்கொடுத்தது.

செந்தில் பாலாஜி, வேலுமணி
செந்தில் பாலாஜி, வேலுமணி

2026 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேலுமணி பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார்.

மறுபக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர்.

2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை ஹாட்பாக்ஸ், கொலுசு ஆகியவற்றைக் கொடுத்து கோவை மாவட்டம் முழுவதையும் திமுக வசமாக்கினார் செந்தில் பாலாஜி.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கோவையில் பணத்திற்கும், பரிசுப் பொருள்களுக்கும் பஞ்சமிருக்காது.

வேலுமணி
வேலுமணி

திமுக மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கினால், மறுபக்கம் கோவையில் செந்தில் பாலாஜியை ஓவர்டேக் செய்து வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். ஆட்சி மாறியதால் கடந்த 4 ஆண்டுகளாக அது வழங்கப்படவில்லை.

வருகிற பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இது தேர்தல் ஆண்டு என்பதால் அதிமுக சார்பில் 10 தொகுதிகளுக்கும் பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்தார்.

அதிமுக பரிசுப் பொருள்கள்
அதிமுக பரிசுப் பொருள்கள்

கடந்த சில மாதங்களாகவே இதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணிகள் நிறைவடைந்து தற்போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டி சட்டை மற்றும் சேலை கொடுக்கப்பட்டு வருகின்றன. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஸ்பெஷல். அங்கு மேற்சொன்ன பரிசுப் பொருள்களுடன் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் குடை வழங்கி வருகின்றனர்.

பரிசுப் பொருள் விநியோகம்
பரிசுப் பொருள் விநியோகம்

அதிமுக தெருமுனைக் கூட்டங்களில் முதற்கட்டமாக பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பரிசுப் பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு டீம்களையும் அமைத்துள்ளனர். ஒரு சில நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

Vijay: "அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார்" - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்

கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அப்போ... மேலும் பார்க்க

"பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம்" - நயினார் மீது ஜோதிமணி காட்டம்

"பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்" ... மேலும் பார்க்க

இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு; ஆனால் எப்படி? | How To?

'நீதிமன்றம்' என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு இங்கு பொருளாதாரமும், அறியாமையும் பெரிய தடையாய் இருக்கின்றன. அதன் காரணமாகவே, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையி... மேலும் பார்க்க

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க