செய்திகள் :

"கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்; பின்னணி என்ன?

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கரூரைச் சேர்ந்த குழுவினர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை பணம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல அ.தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு ராமநாதபுரம் 80 அடி வீதியில் பணப்பட்டுவாடா செய்ததாக கரூர் குழுவினர் மீது அ.தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பிடிபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க-வினர் முற்றுகையிட்ட நிலையில், தி.மு.க-வினரும் குவிந்த நிலையில் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இதேபோல வெரைட்டி ஹால் பகுதியில் பணப்பட்டுவாடா செய்த கரூர்காரர்களை அ.தி.மு.க-வினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புலியகுளம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க-வினரைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை தெற்கு தொகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

பணப்பட்டுவாடா புகார்
பணப்பட்டுவாடா புகார்

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க-விற்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுஞ்செயல் நடைபெற்றுள்ளதால், இத்தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

இதேபோல சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றன. இந்தத் தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யவும், ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுணனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அ.தி.மு.க-வினர் ஆயிரம் ரூபாயும் ... மேலும் பார்க்க

‘கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க 2.0 ஆட்சி அமைந்த உடன் ஒரு லட்சம் கோடி ரூபாயில் கோவை மாவட... மேலும் பார்க்க

தமிழ்நாடு தேர்தல்: இன்று 6 மணியோடு எல்லாம் 'க்ளோஸ்'- விதிப்படி எதற்கெல்லாம் 'நோ' - மீறினால்?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது.இன்று மாலை 6 மணிக்கு மேல், 'நோ' தேர்தல் பரப்புரை, 'நோ' தேர்தல் பிரசாரம், 'நோ' வாக்கு சேகரிப்பு என தேர்தல் சம்பந்தமான அனைத்திற்கும் 'நோ'. ... மேலும் பார்க்க

கோவை தெற்கு: "23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள்" - அண்ணாமலை காட்டம்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதி நாள் வாக்கு சேகரிப்பு வாகனப் பேரணி சிவசக்தி காலனி பகுதியில் துவங்கியது.இப்பேரணியை பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்க... மேலும் பார்க்க

நெல்லை: பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய 'Road Show'! | Photo Album

நெல்லை: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 'ரோடு ஷோ' தேர்தல் பிரச்சாரம் புகைப்படங்கள்! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின் மேலும் பார்க்க

திருநெல்வேலி: அனல் தெறிக்கப் பேசிய வைகோ; தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் புகைப்படங்கள் | Photo Album

திருநெல்வேலி: அனல் தெறிக்க பேசிய வைகோ! தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் புகைப்படங்கள்.!``மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது" - வைகோ மேலும் பார்க்க