செய்திகள் :

கோவை தொகுதிகளில் நற்பணி மன்றம்! - நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வா?

post image

தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தது, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது, ரசிகர்களை சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்தியது போன்றவை அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளைத் தீவிரமடைய செய்துள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை நடிகர் தனுஷ் தொடங்கி இருக்கிறார்.

தனுஷ்
தனுஷ்

இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத் தலைவர் சுப்ரமணியம் சிவா, அனைத்திந்திய செயலர் ராஜா ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கோவை வடக்கு தொகுதி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, கோவை சிங்காநல்லூர் தொகுதி கோவை சூலூர் தொகுதி, கோவை மேட்டுப்பாளையம் தொகுதி மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு உட்பட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவர் G. சங்கரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் தொகுதி, கிணத்துகடவு தொகுதி, பொள்ளாச்சி தொகுதி, வால்பாறை தொகுதி ஆகியவற்றில் தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர் சேர்க்கவும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சதீஸ்குமாரை தொடர்பு கொள்ள வேண்டும். தனுஷ் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அமைச்சரின் கோபத்துக்கு காரணமான யூடியூபர்?; டயர்ட் ஆகும் எம்.எல்.ஏக்கள்! - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இன்றைய நாளின் ஹைலைட்ஸ் இங்கே.தமீமுன் அன்சாரிஅவையில் தமீமுன் அன்சாரி பேசுகையில், 'சட்டமன்றத்தை இங்கிருந்து தீவுத்திடலுக்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: ``தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் வாழ்த்துகள்" - சீமான்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட்.10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போ... மேலும் பார்க்க

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமை... மேலும் பார்க்க

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts). இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசட... மேலும் பார்க்க