செய்திகள் :

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

post image

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமைச்சர் (மரிய வில்சன்) ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

எம்எல்ஏ ராஜேந்திரன்
எம்எல்ஏ ராஜேந்திரன்

அவரது ஆங்கிலம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆனால் அவர் பட்ஜெட்டை வாசிக்கும்போது தமிழில் சில சொற்றொடர்களை அவர் பேசமால் விட்டுவிட்டார். வரும் காலங்களில் நிதியமைச்சர் பிழையின்றி தமிழில் பேச வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என எம்.எல்.ஏ ராஜேந்திரன் கூறினார்.

அதற்கு சபாநாயகர், ``எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது பட்ஜெட் என்று சொல்கிறார். தமிழில் நிதிநிலை அறிக்கை என்று சொன்னால் நன்றாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், ``25 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய கம்யூனிகேஷன் எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.

இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள்.

மரிய வில்சன்
மரிய வில்சன்

கிறிஸ்தவம் எனக்கு ஒரு மொழி கற்றுக்கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.

நான் பைபிள் படித்திருக்கிறேன். நான் இப்படித்தான் பேசுவேன், என்னுடைய ஸ்டைல் இதுதான். எம்.எல்.ஏ ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது" என்று மரிய வில்சன் தெரிவித்திருக்கிறார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போ... மேலும் பார்க்க

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts). இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசட... மேலும் பார்க்க

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' - தவெக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங... மேலும் பார்க்க