செய்திகள் :

’கோவை பெரியார் நூலகம் திறக்கப்படுவது எப்போது?’ – அதிகாரிகள் விளக்கம் என்ன?

post image

கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் என்ற பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்குச் சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. தரைத் தளம் மற்றும் 7 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தின் மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,98,000 சதுர அடி ஆகும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 90,000 புத்தகங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல அறிவியல் மையத்தில் விண்வெளி தொடர்பான ஸ்பேஸ் லிஃப்ட், பிளானட்டோரியம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில அம்சங்கள், கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம், 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், திட்டமிட்டபடி திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, நூலகத்தின் திறப்பு விழா தாமதமானது.

அறிவியல் மையம்
அறிவியல் மையம்

இந்த நிலையில், கடந்த மாதம் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும், திறப்பு விழா நடைபெறும் தேதி குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நூலகக் கட்டடத்தின் அனைத்து முக்கிய கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. தற்போது நூலகர்களால் புத்தகங்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அறிவியல் மையத்தில் மட்டும் ஒரு சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன” என்றனர்.

அனைத்து பணிகளும் விரைவில் நிறைவடைந்தால் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்... மேலும் பார்க்க

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டு... மேலும் பார்க்க

'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே வேதனை

நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி. தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய க... மேலும் பார்க்க