செய்திகள் :

"சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார்.!"- பயிற்சியாளர் பிளெமிங் சொல்வது என்ன?

post image

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன், முதல் இரண்டு போட்டிகளிலும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோது 'தொடர் நாயகன்' விருது வென்ற சஞ்சு சாம்சன், சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் 6 ரன்களிலும், சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங், " சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார். இது டி20 கிரிக்கெட், அவர் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகிவிட்டார். ஆனால் அவரது பேட்டிங் ஃபார்ம் நன்றாகவே இருக்கிறது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

பயிற்சியிலும் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் ஒருமுறை நிலைத்து நின்றுவிட்டால் ஆட்டத்தையே மாற்றிவிடுவார். இரண்டு இன்னிங்ஸை வைத்து ஒரு வீரரை எடை போட முடியாது. ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

அனுபவத்தை முறியடிக்கும் வேகம்; ஐபிஎல் 2026-ஐ அதிரவைக்கும் Gen Z நட்சத்திரங்கள் ஒரு பார்வை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது எப்போதும் திறமைகளை அடையாளம் காணும் ஒரு களமாகவே இருந்து வருகிறது. ஆனால், 2026 சீசன் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. கிரிக்க... மேலும் பார்க்க

MI VS PBKS: பறந்து கேட்ச் பிடித்த ஷ்ரேயஸ்; வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்; ஷாக் ஆன MI! | வீடியோ

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.குறிப்... மேலும் பார்க்க

MI vs PBKS: "இப்போ என்ன சொல்றதுனே தெரியவில்லை..." - தொடர்ச்சியான தோல்விகள் குறித்து ஹர்திக் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் தொடர்ந்து நான்கு தோல்விகள... மேலும் பார்க்க

MI vs PBKS: "அந்தத் திறமை எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது" - வெற்றிக்கான ரகசியத்தைச் சொன்ன ஸ்ரேயஸ்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 16) ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்ட... மேலும் பார்க்க

RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" - ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற பெங்களூரு vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன் சைடு போட்டியாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ 147 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை 15.1 ஓவர்களிலே எட்ட... மேலும் பார்க்க

RCB VS LSG: "நாங்க பேட்டிங்ல சொதப்பிட்டோம், ஆனா நாங்க மீண்டு வருவோம்" - நிக்கோலஸ் பூரன்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கைய... மேலும் பார்க்க