செய்திகள் :

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" - தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

post image

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்று சொல்லித்தான் விவாதத்தைத் தொடங்குகிறார்கள்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

அந்த மானியக் கோரிக்கை அநாமத்தாகக் கிடக்கிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் (திமுக - தவெக) 5 வருடங்களுக்கு முன்பு நடந்தது, பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது என்பன பற்றியெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் மானிக்கக் கோரிக்கை தவிர்த்து வேறு எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தருவதில்லை. சட்டமன்றத்தில் குழாயடி சண்டை வேண்டாம். நேரலை ஒளிபரப்பு மூலம் எம்எல்ஏக்களின் செயல்பாட்டை தொகுதி மக்கள் பார்க்கின்றனர்.

தங்கள் தொகுதி எம்எல்ஏ பேசுகிறாரா, தூங்குகிறாரா என்பதை மக்கள் அறிய முடிகிறது. நேரலையில் ஒளிபரப்பான பின் நீக்கினாலும், நீக்காவிட்டாலும் ஒன்றுதான். சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

தேவையற்ற பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவைக்கு வெளியே பொதுக்கூட்டங்களில் பேசிக் கொள்ளலாம். சட்டப்பேரவையில் ஒருவரையொருவர் சீண்டுவதன் மூலம் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் திசைதிருப்பக் கூடாது" என்று தெரிவித்திருக்கிறார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க