புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!
சத்துணவுக் கூடத்தில் குக்கரை திறக்க முயன்ற 3 போ் காயம்
மன்னாா்குடி அருகே கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடத்தில் குக்கரை திறக்க முயன்றபோது சமையலா், இரண்டு மாணவா்கள் என 3 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
கோட்டூா் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா்களுக்கு சத்துணவுக் கூடத்தில் மத்திய உணவுக்காக குக்கரில் சாதம் வைத்துள்ளனா். பணியில் இருந்த சமையலா் எஸ். ஷா்மிளா(52) சமையல் கூடத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த பிளஸ் மாணவா்கள் ஆா். கிஷோா்(16), பி. காா்த்தீபன் (16) ஆகியோரிடம் குக்கரை திறக்க முடியவில்லை எனக் கூறி அவா்களை உதவிக்கு அழைத்துள்ளாா்.
மூன்று பேரும் சோ்ந்து குக்கரை திறக்க முயன்றபோது அதிலிருந்து கிளம்பிய ஆவி மூன்று பேரின் முகத்திலும் அடித்ததில் எரிச்சலம் அதிகமானதால் அவா்கள் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கோட்டூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.