செய்திகள் :

சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு ரசிகர்கள் வரவேற்பு

post image

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். அவரை கோர்ட் அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதுங்கி இருந்த மம்தா குல்கர்னி நாடு திரும்பினார்.

அவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியதோடு மட்டுமல்லாமல் ஆன்மீகத்திற்கு மாறினார். அவர் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவிற்குச் சென்று கின்னார் அங்காரா ஆன்மிக மடத்தில் சேர்ந்து சன்னியாசியாக மாறினர்.

அங்கு அவர் மகாமண்டலேஷ்வராக உயர்த்தப்பட்டார். ஆனால் அவர் நடித்த படங்களின் காட்சிகள் வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து அவரை மடத்தில் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மம்தா குல்கர்னி சன்னியாசி வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது.

மம்தா குல்கர்னி
மம்தா குல்கர்னி

தற்போது சன்னியாசி வாழ்க்கைக்கு மம்தா குல்கர்னி விடை கொடுத்து இருக்கிறார். சமீபத்தில் மம்தா குல்கர்னி டிவி ஷோ ஒன்றில் பங்கேற்றார். தற்போது அவர் தனது நண்பர்களுடன் கோவாவில் விடுமுறையைக் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

அவற்றை மம்தா குல்கர்னி தன்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சன்னியாசிகள் அணியும் உடையில் இல்லாமல் நவீன உடைகளுடன் காணப்பட்டார். அவர் கோவா கடற்கரையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றினார். ஆனால் அவரது கழுத்தில் உத்திராட்ச மாலை மட்டும் இருந்தது.

அவரது புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியானவுடன் நெட்டிசன்கள் அவரைப் போலி சன்னியாசி என்று விமர்சித்துள்ளனர். மம்தாவின் உருவம் மாறியதைக் கண்டு சமூக வலைத்தளவாசிகள் அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பலர், 'யு-டர்ன் செய்துவிட்டீர்களா' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கிண்டலாக, "சாத்வி ஆக வேண்டும் என்ற ஆவேசம் போய்விட்டதா?" என்று கேட்டுள்ளார். மம்தா இன்னும் தன்னை ஒரு சாத்வியாகக் கருதுகிறாரா அல்லது தனது துறவை முற்றிலுமாகக் கைவிட்டு கவர்ச்சி உலகிற்குத் திரும்பியுள்ளாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மம்தா குல்கர்னி, தான் சார்ந்து இருந்த மடத்தில் இருந்து விலகினார்.

மம்தா குல்கர்னி
மம்தா குல்கர்னி

மம்தா குல்கர்னி 25 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரைக்குத் திரும்பி இருக்கிறார். அவர் பார்தி சிங்கின் பிரபலமான சமையல் ரியாலிட்டி ஷோவான "சிரிப்பு செஃப்ஸ்" இல் விருந்தினராகக் கலந்து கொண்டார். பல வருடங்களுக்குப் பிறகு அவரைத் திரையில் பார்த்தது அவரது ரசிகர்களை நெகிழ வைத்தது.

நிகழ்ச்சியில் அவர் ஆரஞ்சு நிற புடவையில் நேர்த்தியாகக் காணப்பட்டார், அங்கு அவர் சமைப்பது மட்டுமல்லாமல், தனது சக நடிகர்களுடன் நடனமாடினார். வெளிநாட்டில் இருந்தபோது கோஸ்வாமி என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் கோஸ்வாமியை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்கா கைது செய்துள்ளது.

Dhurandhar The Revenge Review: ஆக்ஷன் த்ரில்லர் போர்வையில் 'மோடி' பிரசார சினிமா; திரையனுபவம் எப்படி?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள லியாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் மொத்த அதிகார மையத்தையும் ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்குள் ஊடுருவி, அதில் ஒவ்வொரு படிநிலையாக உயரும் இந்திய உளவாளியின் கதையைச... மேலும் பார்க்க

காயத்தால் ஆக்‌ஷனுக்கு தற்காலிக `நோ' - பள்ளிகால காதல் சப்ஜெக்ட்டுக்கு திரும்பும் ஷாருக்கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்த கட்டமாக காதல் படத்திற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் பல அதிரடி படங்களில் நடித்த பிறகு, இப்போது உடலுக்கு அதிக சிரமம் தராத ஒரு ஒரு காதல் கதாபாத்தி... மேலும் பார்க்க

"மகாராஷ்டிராவில் இந்தி படங்கள் முதலிடத்தில இருக்கு; ஆனா மராத்தியப் படங்கள்..!"- ரித்தேஷ் தேஷ்முக்

சமீபத்தில் நடைபெற்ற 'Creative Economy Summit' நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மராத்திய திரைத்துறை இன்று எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். "மகாராஷ்டி... மேலும் பார்க்க

Battle of Galwan `டு' மாத்ருபூமி - சல்மான் கான் நடிக்கும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடை... மேலும் பார்க்க

Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் பாலிவுட்டில் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.“பு​தி​தாக சின... மேலும் பார்க்க

Akshay Kumar: "சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா?" - அக்‌ஷய் குமாரின் பதில் என்ன?

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நட... மேலும் பார்க்க