செய்திகள் :

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: "உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா?" - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலவர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த டி.மணி என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத் தங்கக் கொள்ளை வழக்கில் சர்வதேச சிலைக்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரள தேவசம் போர்டு முன்னாள் அமைச்சரும், கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

கடகம்பள்ளி சுரேந்திரனின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

இதையடுத்து கடகம்பள்ளி சுரேந்திரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறுகையில், "கடந்த சனிக்கிழமை சிறப்பு விசாரணைக்குழு முன்னிலையில் நான் விசாரணைக்கு ஆஜரானேன். ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கவில்லை.

திருவனந்தபுரம் டி.ஜி.பி அலுவலகம் அருகே உள்ள கிரைம்பிரன்ச் அலுவலகத்தில் வைத்துதான் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். நான் வழக்கமாகப் பயன்படுத்தும் காரில்தான் விசாரணைக்கு ஆஜரானேன்.

இதெல்லாம் பகல் வெளிச்சத்தில் நடந்த விஷயங்களாகும். சபரிமலை தங்கத்தகடு சம்பந்தப்பட்ட விவாதத்தில் அனைத்து ஆவணங்களும் கோர்ட் விசாரணையில் உள்ளன. அனைத்து மீடியாக்களிடமும் அந்த ஆவணங்களின் நகல்கள் உள்ளன.

உன்னிகிருஷ்ணன் போற்றி அளித்த மனுவைப் பரிசீலித்து அவருக்கு உதவவேண்டும் என நான் எழுதிக் கையொப்பமிட்ட கடிதம் உள்ளதாகச் சிலர் பரப்புகிறார்கள்.

அந்தக் கடிதம் யாரிடமாவது இருந்தால் அதை வெளியிடுங்கள். தங்கத்தகடுகளை உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு வழங்கவேண்டும் என நான் உத்தரவிட்டதாக மற்றொரு குற்றச்சாட்டைக் கூறுகின்றனர். அந்த உத்தரவு இருந்தால் அதையும் வெளியிடுங்கள், மக்கள் பார்க்கட்டும்.

தேவசம்போர்டு முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
தேவசம்போர்டு முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

உன்னிகிருஷ்ண போற்றியின் நன்கொடையில் எனது தொகுதியில் பலருக்கும் வீடு கட்டிக் கொடுத்ததாக மற்றொரு குற்றச்சாட்டு கூறுகின்றனர். எனது தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு அரசின் உதவியுடனும், நல்ல மனது உள்ளவர்கள் மூலமும் வீடு கட்டிக்கொடுத்தேன்.

அதில் உன்னிகிருஷ்ணன் போற்றி ஸ்பான்சர் செய்த ஒரு வீடுகூட இல்லை. அப்படி இருந்தால் அந்த வீட்டைச் சுட்டிக்காட்டுங்கள். உண்மைக்கு மாறான பிரசாரம் செய்வது சரியானது அல்ல. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் அவதூறுகளைப் பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்.

தங்கம் கொள்ளை வழக்கில் என்மீது குற்றச்சாட்டு கூறி 84 நாட்கள் கடந்தும், கோர்ட்டில் ஒரு சிறிய பேப்பர்கூட எனக்கு எதிராக ஆஜராக்க எதிர்க்கட்சியால் முடியவில்லை" என்றார்.

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் - சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைய... மேலும் பார்க்க

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வே... மேலும் பார்க்க

ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்... 'திருத்திய' போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும் முக... மேலும் பார்க்க

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.கோவைகடந்த டிசம்பர் 15-ம... மேலும் பார்க்க

திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம்; "போதை அல்ல; மனநலம் பாதிக்கப்பட்டவர்" - ஆணையர்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர்.இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக... மேலும் பார்க்க