திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்ச...
கட்சியின் பெயர் `அ.இ.பு.த.ம.மு.க' சின்னம் - தென்னந்தோப்பு! - சசிகலா அறிவிப்பு
சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். கூடவே அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது!
சசிகலா பேசியதாவது, 'இது எனக்கு ஒரு முக்கியமான நாள். புரட்சித்தலைவர் மக்களுக்காக ஒரு கட்சியை தொடங்கினார். திமுக எனும் தீயசக்தியை வேரறுக்க அந்த கட்சியை வளர்த்தெடுத்தார்.
தமிழக மக்களுக்கு எவ்வளவோ நல்லதுகளை எம்.ஜி.ஆர் செய்தார். அவரை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் கொள்கைகளில் அடிபிறழாமல் பல மக்கள் நலத்திட்டங்களையும் பெண்கள் முன்னேற்றத்துக்குமான ஆட்சியை அம்மா கொடுத்தார்.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது. தீயசக்தி திமுக தமிழக மக்களை கசக்கி பிழிந்து வருகிறது.
இதையெல்லாம் பார்த்துதான் அம்மாவின் பிறந்த நாளில் கட்சியை தொடங்கினேன். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என என் கட்சிக்கு பெயரிடுகிறேன்..

நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். எனக்கு கிடைத்திருப்பது மக்களுடைய சின்னம், தென்னந்தோப்பு. தமிழகம், புதுச்சேரி இரண்டு மாநில தேர்தலிலும் போட்டியிடப் போகிறோம்.' என்றார்.















