செய்திகள் :

சமரச டீலிங்; 'கப்சிப்' ஆன அதிரடி அமைச்சர் டு `ஜோசியருக்கே கட்டம் சரியில்லை' | கழுகார்

post image

மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலிருந்த அ.தி.மு.க மாஜி வைத்திலிங்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தி.மு.க-வில் இணைந்தார். ஆனால், ஒரு ட்விஸ்ட்டாக த.வெ.க ஆட்சியமைத்திருக்கிறது. வைத்திலிங்கம் மீதான வழக்கும் மறுவிசாரணைக்கு வந்திருக்கிறது. 'மூன்று மாதத்திற்குள் வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்தபோது...

வைத்திலிங்கத்தை குடைந்தெடுக்க அமலாக்கத்துறையும் தயாராகும் நிலையில், 'அடுத்து என்ன செய்வது... எப்படி தப்பிப்பது...' என குழம்பிப் போயிருக்கிறாராம் வைத்திலிங்கம். அமைச்சர் செங்கோட்டையனின் உதவியை நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 'த.வெ.க-வின் உதவியை நாடினால், உங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்வார்கள்' என வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள சூழலில், 'தன்னைச் சுற்றியிருக்கும் பிடியிலிருந்து விடுபட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

த.வெ.க ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே, தமிழக முதல்வரின் அரசியல் பிரிவுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் முதல்வரின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். இந்த நியமனம் கடும் எதிர்வினைகளைக் கிளப்பவே, அறிவிப்பு பின்வாங்கப்பட்டது. சமீபத்தில் ஆட்சி மேலிடத்தைச் சந்தித்த ஜோதிடர், தனக்கு ஒரு பொறுப்பு வழங்கச்சொல்லி மீண்டும் முறையிட்டிருக்கிறார். 'டெல்லி சிறப்பு பிரதிநிதியை தயாரிப்பாளருக்குக் கொடுத்துவிட்டோம். ஒரு வருடம் பொறுமையாக இருங்கள். பார்க்கலாம்..' என்று கைவிரித்துவிட்டதாம் மேலிடம்.

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்
ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்

டென்ஷனான ஜோதிடர், 'அவர் ஜெயிக்கப் போறதை இரண்டு வருஷத்துக்கு முன்னாலேயே கணிச்சு சொன்னவன் நான். அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்ததே நான்தான். எனக்கே ஒன்னும் இல்லைங்கறாங்களே...' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்க்கிறாராம். `நீங்கள் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பீர்கள் என ஆரூடம் கூறியவர், தனது ஜாதகம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கத் தவறிவிட்டாரே...' என நகையாடுகிறார்கள் த.வெ.க-வினர்.

முட்டை மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறைகளில் அடுத்தடுத்த ஆய்வுகளை நடத்தி, சில பட்டறைகளுக்கு சீல் வைத்ததுடன், நள்ளிரவிலும் அதிகாரிகளை அழைத்து இன்ஃபெக்ஷன் நடத்தி வந்தார் மாவட்ட மாண்புமிகு. 'அவருக்கும் சாயப்பட்டறை துறைக்கும் சம்பந்தமேயில்லை. ஆனாலும், சாயப்பட்டறைகளை மட்டுமே குறிவைத்து ஆய்வு செய்து வருகிறாரே...' என அதிகாரிகள் புலம்பியும் பொருட்படுத்தாமல் களமாடி வந்திருக்கிறார் மாண்புமிகு. அப்படி, மாவட்டத்தையே உருட்டி கலக்கியவர், திடீரென சைலென்ட் மோடுக்குச் சென்றுவிட்டார்.

சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் அமைச்சர் வீட்டில் நடைபெற்ற சமரச டீலிங்க்கு பிறகுதான் அவர் சைலன்ட் மோடுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 'மாதம் பிறந்தால் லட்டுகள் வீடு தேடிவரும்... எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்' என பட்டறை உரிமையாளர்களின் வாக்குறுதியால் குளிர்ந்துவிட்டதாம் மாண்புமிகு தரப்பு. தண்ணீர்துறை அமைச்சரின் ஆதரவாளர் என்பதால், இவரது செயல்பாடுகள் குறித்த புகார்களை தலைமைக்கு அனுப்புவதா.. வேண்டாமா என கடும் தயக்கத்தில் இருக்கிறார்களாம் முட்டை மாவட்ட த.வெ.க-வினர்.

எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி உடனான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பழைய பதவி கிடைக்காததால் கோபத்தில் இருக்கும் வேலுமணி, அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தனித்து செயல்பட்டு வருகிறாராம்.

வேலுமணி

இதனிடையே, 'அ.தி.மு.க பொதுச்செயலாளரை மாற்ற வேண்டும்' என டெல்லியை நாடியது வேலுமணி டீம். ஆனால், அதற்கு எந்த பதிலும் சொல்லாமல், கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டதாம் டெல்லி. 'சரி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வுக்கு செல்லட்டுமா...' என டெல்லியிடம் கேட்டிருக்கிறார் வேலுமணி. அதற்கும் டெல்லி பதில் சொல்லாததால் என்ன செய்வதென தெரியாமல் திணறி வருகிறதாம் வேலுமணி தரப்பு.

தி.மு.க கட்சி ஆட்சியின்போது, பைசா துறைக்கு அமைச்சராக இருந்த கோல்டு பிரமுகர், சொந்த மாவட்ட அ.தி.மு.க மாஜியை சமீபத்தில் போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினாராம். 'தி.மு.க-வுக்கு மாஜியை வரவேற்கவே சிக்னல் காட்டியிருக்கிறார் கோல்டு பிரமுகர்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதாவது, 'மறுசீரமைப்புக்கு பின் மாவட்டத்திலிருக்கும் தி.மு.க சீனியருக்கு ஓய்வு கிடைக்கப் போகிறது.

அவரிடத்தை நிரப்புவதற்கு அ.தி.மு.க மாஜியை தி.மு.க-வுக்குள் இழுத்துவர திட்டமிடுகிறார் கோல்டு பிரமுகர். அதன் எதிரொலியாகத்தான், 'ஸ்டாலின் கோபப்பட்டால் த.வெ.க ஆட்சியே அழிந்துவிடும்' என்று பேசியிருக்கிறார் அ.தி.மு.க மாஜி... ' என்கிறார்கள் விவரப்புள்ளிகள். இதனிடையே, 'சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி போன்றவர்கள் போய்விட்டால், எடப்பாடிக்கு நெருக்கமான இடத்தில் நீங்கள் இருக்கலாம்.. அவசரப்படாதீர்கள்' என மாஜிக்கு அறிவுரைச் சொல்கிறார்களாம் உள்ளூர் அ.தி.மு.க புள்ளிகள்

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம்

நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது. ராகுல் காந்தி vs அமித் ஷா வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல... மேலும் பார்க்க

சென்னையில் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் - Chubb, Nordex, MotiveLink உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள... மேலும் பார்க்க

"சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்" - என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ரா... மேலும் பார்க்க

கைதாகிறாரா செந்தில் பாலாஜி? - டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் த... மேலும் பார்க்க