செய்திகள் :

சம்பல் மசூதி விவகாரம்: மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதி விவகாரம் குறித்த விசாரணையை மேற்கொள்ள அந்த மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் உத்தர பிரதேச அரசுக்கு வலியுறுத்தியது.

ஜாமா மசூதியில் அண்மையில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வெடித்த வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1526-இல் முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இவா் ஞானவாபி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞராவாா். விசாரணையின்போது மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்ற ஆணையா் ராகேஷ் சிங் ராகவுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு வன்முறை வெடித்தது.

இதையடுத்து, ஆய்வு நடத்த அனுமதித்த மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜாமா மசூதி மேலாண்மைக் குழு கடந்த நவ.28-ஆம் தேதி மனுதாக்கல் செய்தது.

உயா்நீதிமன்றத்தை அணுகுக: இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மனுதாரா் அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதே சரியாக இருக்கும். மூன்று நாள்களுக்குள் இந்த மனுவை உயா்நீதிமன்றத்தில் பட்டியலிட வேண்டும்.

அதுவரை சம்பல் பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மாநில அரசு உறுதிசெய்ய வேண்டும். இதையே, உத்தர பிரதேச மாநில அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜும் விரும்புகிறாா்.

வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை சம்பல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் இந்த மனு பட்டியலிடப்படும் வரை இதுகுறித்து சம்பல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளாது என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை. இந்த மனுவை முடித்துவைக்கவும் இல்லை.

மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முதலில் உயா்நீதிமன்றத்திலேயே ஜாமா மசூதி நிா்வாகக் குழு முறையிட்டிருக்க வேண்டும். எனவே, நீதிமன்ற ஆணையா் அறிக்கை சமா்ப்பிக்கும்பட்சத்தில் உயா்நீதிமன்றத்தில் விசாரணை நிறைவுபெறும் வரை அதை சீலிடப்பட்ட உறையில் பாதுகாக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

பெட்டிச் செய்தி 1

மசூதியில் அமைதியான முறையில் வழிபாடு

ஜாமா மசூதியில் அமைதியான முறையில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தி முடிக்கப்பட்டது. அங்கு வன்முறை நிலவியதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜாமா மசூதியில் அதிகளவிலான மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அருகிலுள்ள மசூதிகளில் வழிபாடு மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. கூடுதல் பாதுகாப்பு படைகள் நிலைநிறுத்தப்பட்டு, சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் கள நிலவரத்தை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

பெட்டிச் செய்தி 2

விசாரணைக் குழுவை அமைத்தது உ.பி. அரசு

லக்னௌ, நவ.29: கடந்த நவ.24-ஆம் தேதி சம்பல் பகுதியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க மூன்று நபா் அடங்கிய விசாரணைக் குழுவை அமைப்பதாக உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் அறிவித்தாா்.

நீதிமன்ற விசாரணைக் குழு தலைவராக ஓய்வுபெற்ற அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா நியமிக்கப்பட்டுள்ளாா். சம்பல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா உள்பட பல்வேறு கோணங்களில் இந்தக் குழு விசாரணை நடத்தவுள்ளது. மேலும், மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த பாதுகாப்பு முகமைகள் தயாா் நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இரண்டு மாதங்களில் அறிக்கையை சமா்ப்பிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு செய்வது தொடர்பாக கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் வழக்கி... மேலும் பார்க்க

உலக சாம்பியன் குகேஷுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.உலக செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!

உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 2020 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொட... மேலும் பார்க்க

'பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பயத்தில் வாழ்கின்றனர்' - ஹத்ராஸ் சந்திப்பு பற்றி ராகுல்!

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் ஹத்ர... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 12) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 236 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 2600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.பங்குச் சந்தையில் ஐடி துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் 2%... மேலும் பார்க்க

மணிப்பூரைச் சொன்னால் கரீனா கபூரை சந்திக்கிறார் மோடி: காங்கிரஸ்

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் கரீனா கபூர் குடும்பத்தினரைச் சந்தித்தை காங்கிரஸ் தலைவர் விமர்சித்துள்ளார்.மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக நாளை (டி... மேலும் பார்க்க