செய்திகள் :

'சர்வே முடிவுகள்; கட்சிக் கட்டமைப்பு; MLA மீதான அதிருப்தி'- விஜய் பெரம்பூரை டிக் அடிக்க காரணம் என்ன?

post image

விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருக்கிறார். நாளையே வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டு தன்னுடைய தொகுதியிலிருந்தே பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார்.

விஜய் பெரம்பூர் தொகுதியை நம்பிக்கையுடன் டிக் அடித்ததற்கான காரணம் என்ன?

Vijay
Vijay

முதலில் விஜய் விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவே தகவல் வெளியானது. தவெக முகாமிலும் அதை உறுதி செய்தனர்.

விஜய் பிறந்த வீடு அந்தத் தொகுதிக்குள்தான் வருகிறது. அதனால் செண்டிமெண்டாகவே அந்தத் தொகுதி தனக்கு ஒர்க் அவுட் ஆகும் என விஜய் நினைத்தார். ஆனால், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பாக விஜய்யின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. காரணம், களத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்.

தவெக சார்பில் வார அடிப்படையில் தொகுதிவாரியாக சர்வே செய்து மக்களின் மனநிலையை நோட் செய்து கொண்டே வந்திருக்கின்றனர். அப்படி எடுக்கப்பட்ட சர்வேக்களில் தேர்தல் நெருங்க நெருங்க பெரம்பூர் தொகுதியில் தவெகவுக்கான ஆதரவு பெருகுவது கண்கூடாகத் தெரிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்துதான் பெரம்பூரை நோக்கி விஜய்யின் பார்வை திரும்பியிருக்கிறது.

Vijay
Vijay

கட்சியின் கட்டமைப்பு இந்தத் தொகுதியில் வலுவாக இருப்பதும் விஜய்யுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. மாவட்டச் செயலாளர் சிவா இருக்கிற 2,22,000 வாக்காளர்களில் 44,000 பேரை கட்சியின் உறுப்பினராக்கியிருக்கிறார். சென்னையிலேயே தவெகவுக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கும் தொகுதி பெரம்பூர்தான்.

மேலும், தொகுதிக்குள் கணிசமான அளவில் கிறிஸ்தவர்களின் வாக்கும் உழைக்கும் மக்களிம் வாக்குகளும் இருக்கிறது. அதுவும் தங்களுக்குச் சாதகமாக அமையும் என விஜய் நம்புகிறார்.

அதேமாதிரி, தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஆர்.டி.சேகர் மீது கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் நற்பெயர் இல்லை என்பது விஜய் தரப்பின் எண்ணம். ஆர்.டி.சேகரே மீண்டும் போட்டியிட்டால் சவால் கொஞ்சம் குறையுமென்று விஜய்யின் வியூக தரப்பு நினைத்தது.

அவர்களின் எணத்திற்கேற்பவே இப்போது திமுக சார்பில் ஆர்.டி.சேகரே மீண்டும் போட்டியிடுகிறார். அதேமாதிரி, எதிர் முகாமில் அதிமுகவும் தொகுதியை பாமகவுக்கு தள்ளிவிட்டது.

Vijay
Vijay

இந்தக் காரணங்களால்தான் விஜய் பெரம்பூரை டிக் அடித்தார் என்கின்றனர். நாளை முதல் விஜய் தொகுதிக்குள் பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார். இனிதான் களம் வேகமெடுக்கப் போகிறது(?)

'நாங்க செய்ததெல்லாம் வேஸ்ட்டா கோபால்?' - நண்பரை இறக்கிய விஜய்; கொந்தளிக்கும் தூத்துக்குடி தவெக!

'தூத்துக்குடியில் நண்பர் நிற்கிறார்' என தன்னுடைய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜய். கட்சித் தலைவரின் நண்பர் தங்களுடைய தொகுதியில் களமிறங்குவதை தூத்துக்குடி தவெகவினர் கொ... மேலும் பார்க்க

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான 'நோ கிங்ஸ... மேலும் பார்க்க

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' - விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 24 பெண்களுக்கும் 11 இஸ்லாமியர்களுக்கும் 11 கிறிஸ்தவர்களுக்கும் விஜ... மேலும் பார்க்க

"விஜய் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள இப்படிச் செய்கிறார்'' - எல்.முருகன் சொல்வது என்ன?

தேசிய ஜனநாயக் கூட்டணியில் பழநி தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்காததைக் கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ''பழநி தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படுமென நம்பிக்கையோடு வேலை பார்த்... மேலும் பார்க்க

திமுக : ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; உதயநிதியின் ஆதிக்கம் - 'அப்ருவல்' கொடுத்த முதல்வர்!

மூன்று அமைச்சர்கள் உட்பட பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை கழற்றிவிட்டு, தி.மு.க வின் வேட்பாளர்கள் அறுபது முகங்களை களத்தில் இறக்கியுள்ளது தலைமை. மண்டல பொறுப்பாளர்களின் ஆதிக்கம், கடைசி நேரத்தில் லிஸ்டில் மாற... மேலும் பார்க்க