செய்திகள் :

சமையல் சூப்பர் ஸ்டார்: "உணவே மருந்து என்பதற்கேற்ப உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்" - செஃப் தீனா

post image

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்றது.

விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு என 12 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று இன்று (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்று வருகிறது.

அவள் விகடன் அமைத்துக் கொடுத்திருக்கும் அற்புதமான மேடையில் 38 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டுள்ளனர்.

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3
சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3

போட்டியின் நடுவரான செஃப் தீனா, சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் நந்தினி, ஸ்ரீ ஜனனி கேட்டரிங் சர்வீஸ் சார்பில் M. S. ஹரீஷ், போட்டியாளர்கள் துர்கா பாய் மற்றும் உமா மோகன்தாஸ் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

போட்டியாளர்களை வரவேற்று பேசிய செஃப் தீனா, “இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் போட்டியாளர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

சீசன் 3, முந்தைய சீசன்களை விட அதிக வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது. இந்த சீசனில் புதிய போட்டியாளர்கள் அதிகமாக இணைந்திருப்பது, இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் அமோக வரவேற்பைக் காட்டுகிறது.

இந்தச் சமையல் போட்டியின் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான உணவைச் சமைப்பது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள திறமையான சமையல் கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதும்தான்.

'உணவே மருந்து' என்பதற்கேற்ப உடலுக்கு ஏற்ற உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும். இந்தப் போட்டியின் மூலம் பல புதிய சமையல் குறிப்புகளை நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3
சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3

‘உணவே மருந்து’ எனும் தலைப்பில் முதலாவதாக 20 போட்டியாளர்கள் தங்களது ரெசிப்பிகளைச் சமைத்து வருகிறார்கள்.

போட்டி விதிமுறைகளின்படி, இரண்டு மணி நேரத்தில், ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், சைட் டிஷ் மற்றும் டெஸர்ட் என நான்கு உணவுகளைச் சமைக்க வேண்டும். தற்போது போட்டியாளர்கள் ஆர்வமுடன் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சின்னத்திரை பிரபலங்கள், பவித்ரன், நவீந்தர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

வட சென்னை: பாலக் சிக்கன் பாஸ்தா டு சௌசௌ சட்னி! - சமையல் சூப்பர் ஸ்டாரில் கலக்கிய போட்டியாளர்கள்!

வட சென்னையில் நடைபெற்ற சக்தி மசாலா சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 போட்டி நிறைவு பெற்றது. சக்தி மசாலா, சௌபாக்யா ஆப்ளையன்சஸ், ஆர் கே ஜி நெய், கோல்ட் வின்னர், கோஹினூர் பாசுமதி அரிசி, நாகா, எக்சோ, சுப்ரீம்... மேலும் பார்க்க

வடசென்னையில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி திரண்டு வந்த போட்டியாளர்கள்!

சமையலைக் கொண்டாடும் பிரம்மாண்ட மேடை, சக்தி மசாலா வழங்கும் 'அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை சக்தி மசாலா, ... மேலும் பார்க்க

சமையல் சூப்பர் ஸ்டார்: பனீர் டோக்லா, பாலக் பூரி, ஜீரா அதிரடி காட்டிய சென்னை போட்டியாளர்கள்!

தென்சென்னையில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் 'அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 நிறைவு பெற்றது.சென்னை மற்றும் அதன் சற்று வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தங்கள் உணவுக... மேலும் பார்க்க

சமையல் சூப்பர் ஸ்டார்: மல்பெரி ஜாம், புடலங்காய் கட்லெட்; சென்னையைக் கலக்கிய போட்டியாளர்கள்!

சமையல் கலையை அங்கீகாரம் கொடுக்க, பிரமாண்ட மேடை அமைத்துக் கொடுக்கும் விதமாக, சக்தி மசாலா வழங்கும் 'அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. விழுப்புரம்... மேலும் பார்க்க

சமையல் சூப்பர் ஸ்டார்: சட்னி சாதம், ரவா பனீர் கீர், மாங்காய் சம்மந்தி! அசத்திய ஈரோடு போட்டியாளர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிறைவு பெற்றது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த 244 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாங்கள் வீட்டி... மேலும் பார்க்க

சமையல் சூப்பர் ஸ்டார்: திரண்டு வந்த ஈரோடு போட்டியாளர்கள் அணிவகுத்த அறுசுவை உணவுகள்!

சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான மேடை அமைத்து கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடை... மேலும் பார்க்க