செய்திகள் :

தவெக: நீண்ட கால பணியாளரின் மகனை வேட்பாளராக்கிய விஜய்! - பின்னணி என்ன?

post image

தவெகவின் வேட்பாளர் பட்டியலை இன்று விஜய் வெளியிட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதன் என்பவர் போட்டியிடுவார் என விஜய் அறிவித்திருக்கிறார்.

இந்த சபரிநாதன் வேட்பாளர் ஆனதன் பின்னால் பெரும் சுவாரஸ்யம் இருப்பதாகக் கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

சபரிநாதன் அப்பா ராஜேந்திரன். அவர் விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் விஜய்க்கு டிரைவராகப் பணியைத் தொடங்கியவர், இப்போது விஜய்க்கு நிழலாக உடனிருக்கும் நலம் விரும்பியாக இருக்கிறார்.

விஜய் எங்கே சென்றாலும் அவருக்குப் பின்னால் ராஜேந்திரன் இருப்பதைப் பார்க்க முடியும். தனது நெருங்கிய வட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே விஜய் இடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் அதில் ராஜேந்திரன் மிக முக்கியமானவர் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

விஜய் பனையூருக்கு வந்தாலும் சரி தனி விமானத்தில் வெளியூர்களுக்குப் பறந்தாலும் சரி ராஜேந்திரன் எப்போதும் உடன் இருப்பார். விஜய் காரின் முன்னிருக்கை எப்போதுமே ராஜேந்திரனுக்குத்தான்.

ராஜேந்திரன் - விஜய்
ராஜேந்திரன் - விஜய்

விஜய்யும் ராஜேந்திரனை ஒரு பணியாளர் போல பார்க்காமல் 'அண்ணன்' என்றுதான் பெர்சனலாக அழைப்பார் என்கின்றனர் இருவரின் பந்தத்தையும் அறிந்தவர்கள். 'விஜய் கட்சி ஆரம்பத்து பொறுப்புகளைப் போடும்போது ராஜேந்திரனை அழைத்து, 'அண்ணன் உங்களுக்கு எதாவது செய்யணும். என்ன பொறுப்பு வேணும்ணே...' எனக் கேட்டிருக்கிறார்.

ராஜேந்திரன், 'எனக்கு வயசாகிடுச்சே தம்பி...' எனக் கூற, உடனே விஜய் அப்படியெனில் உங்களின் மகனை அழைத்து வாருங்கள் எனக் கூறி மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஒப்படைத்தார் என்கின்றனர் தவெகவின் உள்விவகாரம் அறிந்தவர்கள். சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியை ஒப்படைத்து மாவட்டச் செயலாளர் பதவியையும் வழங்கியிருந்தார் விஜய்.

விஜய்யுடன் ராஜேந்திரன் - சபரி
விஜய்யுடன் ராஜேந்திரன் - சபரி

விஜய் முதலில் தான் போட்டியிட விருகம்பாக்கம் தொகுதியைத்தான் டிக் அடித்து வைத்திருந்தார். சில வாரங்களுக்கு முன்புதான் பெரம்பூருக்கு மாறலாம் என முடிவெடுத்தார். அதனால் முதற்கட்டமாக விஜய் இறுதி செய்த வேட்பாளர்களின் பட்டியலிலேயே விருகம்பாக்கத்தில் சபரியின் பெயரும் இடம்பெற்றது.

'உங்களில் ஒரு சிலரை நானே நேரடியாகக் கைப்பட தேர்வு செய்திருக்கிறேன்' என விஜய் வேட்பாளர்களிடம் பேசியிருக்கிறார். விஜய் அப்படி பெர்சனலாகத் தேர்வு செய்த ஒரு சில வேட்பாளர்களில் சபரிநாதனும் ஒருவர் என்கின்றனர்.

தவெக: திருச்சி கிழக்கை டிக் அடித்த விஜய்; காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டடு நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் அந்தக் கட்சியின் வரவு, ... மேலும் பார்க்க

'விஜய் அறிவித்த 234 வேட்பாளர்கள்!' - முழு பட்டியல் இங்கே!

தவெக தலைவர் விஜய் அறிவித்த 234 வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.Vijay 1. பெரம்பூர் - விஜய்2. திருச்சி கிழக்கு - விஜய்3. தி.நகர் - புஸ்ஸி ஆனந்த்4. வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜூனா5. கொளத்தூர் - வி.எஸ்.பாபு6. ... மேலும் பார்க்க

அவிநாசி: 26 வயதில் திமுக வேட்பாளராகக் களமிறங்கும் இளம் மருத்துவர்; யார் இந்த கோகிலா மணி?

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தரப்பில் வேட்பாளராகக் களமிறங்கும் நபர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்ட... மேலும் பார்க்க

'தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே...' - விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!

தவெக தலைவர் விஜய் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில், இளைஞர்களுக்கான சில வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். Vijayஇளைஞர்களுக்கென விஜய் அறிவித்த வாக்குறுதிகள்போதைப்பொருள... மேலும் பார்க்க

தவெக: "ஒரு எம்எல்ஏ எப்படி இருக்கணும் தெரியுமா?" - வேட்பாளர்களுக்குப் பாடமெடுத்த விஜய்!

தவெகவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டுமென வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை கூறியிருந்தார்.விஜய் விஜய் பேசிய... மேலும் பார்க்க

தவெகவின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார்.வேட்பாளர்கள்விஜய் வெளியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியல்வேட்பாளர்கள்'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித... மேலும் பார்க்க