செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங்: "என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி

post image

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார்.

அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொகுதியின் வேட்பாளராக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான பொற்கொடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பொற்கொடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

அப்போது, ``தமிழக மாநில பகுஜன் சமாஜ் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கூட்டணியில் எங்களுக்கு 'திரு.வி.க நகர்' தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் நாங்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, என் கணவரின் படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சட்டமன்றத்திலும் இது குறித்துப் பேசியுள்ளார்.

அதேபோல், என்.டி.ஏ கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களும் என் கணவருக்காகத் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல் முறையாக நான் தேர்தலில் போட்டியிடுவது எனக்கு மிகவும் முக்கியமானது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல. என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கான ஒரு போராட்டமாகவும் பார்க்கிறேன்.

திரு.வி.க நகர் தொகுதியைப் பொறுத்தவரை, அங்கு எங்களுக்குப் பெரும் செல்வாக்கு உள்ளது. மக்களின் ஆதரவோடும் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

தவெக: "ஒரு எம்எல்ஏ எப்படி இருக்கணும் தெரியுமா?" - வேட்பாளர்களுக்குப் பாடமெடுத்த விஜய்!

தவெகவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டுமென வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை கூறியிருந்தார்.விஜய் விஜய் பேசிய... மேலும் பார்க்க

தவெகவின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார்.வேட்பாளர்கள்விஜய் வெளியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியல்வேட்பாளர்கள்'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித... மேலும் பார்க்க

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தி.மு.க - அ.தி.மு.க என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த... மேலும் பார்க்க

திமுக: சுரேஷ்ராஜனுக்கு கல்தா; நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. கடந்தமுறை வென்ற பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்... மேலும் பார்க்க

மக்கள் இயக்கம், மாற்றுக்கட்சி, பணபலம்! - விஜய் டிக் அடித்திருக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், கட்சி வட்டாரங்களின் வழி நமக்கு கிடைத்த உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.TVK Vijay - தவெக விஜய்உத்தேச வேட்பாளர் பட்டியல் :ப... மேலும் பார்க்க

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது.... மேலும் பார்க்க