செய்திகள் :

'டார்கெட் தலைநகரம்!' - சென்னையில் இறங்கும் தவெகவின் முக்கிய தலைகள்! - வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

post image

சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார்.

இந்நிலையில், 'டார்கெட் தலைநகரம்' என்கிற முடிவோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சென்னைக்குள்ளேயே இறங்கவிருப்பதாகக் கூறுகின்றனர் தவெகவினர்.

த.வெ.க - விஜய்
TVK - Vijay

சென்னையில் களமிறங்கும் தவெக வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் இங்கே :

பெரம்பூர் - விஜய்,

வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா,

ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி பிரபாகர்,

விருகம்பாக்கம் - சபரிநாதன்,

எழும்பர் (தனி) - ராஜ்மோகன்,

வேளச்சேரி - கிறிஸ்டி பிரித்திவி,

ஆர்.கே.நகர் - மரிய வில்சன்,

கொளத்தூர் - வி.எஸ்.பாபு,

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி - டி.செல்வம்,

துறைமுகம் - சினோரா அசோக்,

மயிலாப்பூர் - வெங்கட்ராமன்,

தி.நகர் - புஸ்ஸி ஆனந்த்,

TVK Vijay - விஜய்
TVK Vijay - விஜய்

அண்ணா நகர் - ராம்குமார்,

சோழிங்கநல்லூர் - ஈ.சி.ஆர்.சரவணன்,

ராயபுரம் - கோகுல்,

திரு.வி.க நகர் (தனி) - பல்லவி,

தவெக தலைவர் விஜய் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தான் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார் விஜய்.

பெரம்பூரில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் ஓட்டும் சிட்டிங் எம்.எல்.ஏ மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் மீதான அதிருப்தி விஜய்க்குக் கைகொடுக்கும் எனத் தவெக தரப்பு நம்புகிறது.

மேலும், அதிமுக இந்தத் தொகுதியில் நிற்காமல் பாமகவுக்கு தொகுதியைக் கொடுத்திருப்பதையும் தங்களுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கின்றனர் தவெகவினர். பெரம்பூருக்குப் பக்கத்து தொகுதியான வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா களமிறங்குகிறார்.

திமுக சார்பில் வில்லிவாக்கத்தில் அண்ணாநகர் கார்த்தி களமிறங்குகிறார். ஆதவ்வும் கார்த்தியும் ஒரு காலத்தில் ஐபாக்குடன் இணைந்து திமுகவுக்காகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகரில் தவெக சார்பில் போட்டியிடும் மரிய வில்சன் கடந்த 15 நாள்களாக தொகுதியிலேயே சுற்றி வந்து வீடு வீடாகப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

Aadhav Arjuna
Aadhav Arjuna

நான்கு நாள்களுக்கு முன்பு எழும்பூரில் பொதுக்கூட்டம் நடத்தி ராஜ் மோகனும் வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதிமுக - பாஜக வலுவாக இருக்கும் தி.நகர் தொகுதியில் பொதுச்செயலாளர் ஆனந்த் களமிறங்குகிறார். தொகுதியில் ஒன்றிரண்டு நாள்கள் வேலை பார்த்த ஆனந்த், தொகுதி மாறலாமா என்ற யோசனைக்கும் சென்றிருக்கிறார்.

ஆனந்த் போட்டியிடும் தொகுதியில் கடைசி நிமிட மாற்றம் இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. மாவட்டச் செயலாளர்களில் ஈ.சி.ஆர் சரவணனுக்கும் விருகம்பாக்கம் சபரிக்கும் திரு.வி.க நகர் பல்லவிக்கும் மட்டுமே சீட் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

துறைமுகம் தொகுதியைக் கைப்பற்ற 2-3 கோஷ்டி இடையே கடும் மோதல் நிலவியது. இறுதியில் ஆதவ் சிபாரிசோடு கட்சிக்குள் வந்த முன்னாள் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் அசோக்கிற்கு தொகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுகவிலிருந்து வந்த வி.எஸ்.பாபுவுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. வடசென்னை ஏரியா முழுவதும் இவரின் அனுபவம் தவெகவுக்கு உதவும் என நம்புகின்றனர்.

உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியில் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி தவெகவில் இணைந்த டி.செல்வம் வேட்பாளராகிறார். சேப்பாக்கத்திற்கான வேட்பாளரைத் தேர்வு செய்ய தவெக முகாம் அதிக நாள்களை எடுத்துக் கொண்டதாகக் கிசுகிசுக்கின்றனர்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த், விஜய்

சென்னையில் திமுக வலுவாக இருப்பதால், இங்கே கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் களமிறங்கி களத்தை திமுக vs தவெக என மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்திருப்பதாக கட்சியின் வியூக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

மேலும், தவெக சார்பில் எடுக்கப்பட்ட பல சர்வேக்களும் சென்னையில் கட்சிக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதாகக் காட்டுவதாகவும் கூறுகின்றனர். அதனால்தான் கட்சியின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் சென்னையை மொய்க்கிறார்களாம்.

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தி.மு.க - அ.தி.மு.க என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த... மேலும் பார்க்க

திமுக: சுரேஷ்ராஜனுக்கு கல்தா; நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. கடந்தமுறை வென்ற பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்... மேலும் பார்க்க

மக்கள் இயக்கம், மாற்றுக்கட்சி, பணபலம்! - விஜய் டிக் அடித்திருக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், கட்சி வட்டாரங்களின் வழி நமக்கு கிடைத்த உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.TVK Vijay - தவெக விஜய்உத்தேச வேட்பாளர் பட்டியல் :ப... மேலும் பார்க்க

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது.... மேலும் பார்க்க

வேடசந்தூர்; செ., பாலாஜி ஆதரவாளருக்கு டிக் அடித்த திமுக; சிட்டிங் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்ட பின்னணி!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செ... மேலும் பார்க்க

'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 164 வேட்பாளர்கள் திமுக சார்பில் நேரடியாக களமிறங்குகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் தொகுதி மாறவில்லை. தவெக சார்பில் விஜய் நாளை ... மேலும் பார்க்க