செய்திகள் :

திமுக: சுரேஷ்ராஜனுக்கு கல்தா; நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது எப்படி?

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.

கடந்தமுறை வென்ற பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் தொகுதியை மேயர் மகேஷ் எதிர்பார்த்து வேலைசெய்து வந்தார். ஒவ்வொரு சமுதாய கோயில்களுக்கும் சொந்த செலவில் கலையரங்கம் அமைத்துகொடுப்பது, ஷெட் மற்றும் தரைத்தளம் அமைத்துகொடுப்பது எனப் பணிகள் செய்துவந்தார்.

கடந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆஸ்டின் தி.மு.க அமைப்பு துணைச் செயலாளராக ஆனதைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் கட்சிப்பணிகளைச் செய்துவந்தார்.

மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விரும்பாமல் இருந்துவந்த ஆஸ்டின் கடைசிக்கட்டத்தில் நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு போட்டிருந்தார்.

இந்த நிலையில் மேயர் மகேஷ் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகவும், ஆஸ்டின் நாகர்கோவில் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்டின்
ஆஸ்டின்

இதற்கு என்ன காரணம் எனத் தி.மு.க வட்டாரத்தில் கூறுகையில், "கன்னியாகுமரி தொகுதியில் இந்து நாடார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனத் தி.மு.க-வினர் கோரிக்கைவிடுத்து வந்தனர். கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் கடந்தமுறை கன்னியாகுமரியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டபோது, சொந்த கட்சி நிர்வாகிகளே எதிராக வேலை செய்ததால் அவர் தோல்வி அடைந்தார்.

அது குறித்து சில நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு தலைமை வரை சென்றது. இந்த நிலையில் அங்கு இந்து நாடார் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனச் சிலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

அப்போது அதில் சில பெயர்கள் கடந்தமுறை ஆஸ்டினுக்கு எதிராக வேலை செய்ததாகக்கூறி ரிஜெக்ட் ஆகின. எனவே கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் மேயர் மகேஷ் இந்து நாடார் என்பதால் அவரது பெயர் டிக் ஆனது.

வேட்பாளர் பட்டியல் தயாராகும் முன்பு கடைசி நேரத்தில் தலைமையில் இருந்து, 'கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?' எனக்கேட்டு ஒரு போன் மேயர் மகேசுக்கு வந்துள்ளது. 'தலைவர் சொன்னால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுகிறேன்' என மேயர் மகேஷ் சொல்லியுள்ளார். அதைத்தொடர்ந்தே தலைமை தீர்க்கமான முடிவை எடுத்தது.

மேயர் மகேஷ், சுரேஷ்ராஜன்
மேயர் மகேஷ், சுரேஷ்ராஜன்

நாகர்கோவில் தொகுதியில் மேயர் மகேஷைத் தவிர்த்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி-யும் மாநில மகளிரணி செயலாளருமான ஹெலன் டேவிட்சன் ஆகியோர் சீட் கேட்டனர். கடந்தமுறை பா.ஜ.க-விடம் நாகர்கோவிலைப் பறிகொடுத்ததுபோன்று இந்தமுறை இழந்துவிடக்கூடாது என்பதால் தலைமை வேட்பாளர் தேர்வில் எந்தப் பரிந்துரையையும் ஏற்கவில்லை.

அந்தச் சமயத்தில்தான் நாகர்கோவிலில் கடந்த தேர்தல் வரலாற்றில் அதிகமாக கிறிஸ்தவ வேட்பாளர்கள் வென்றுள்ளதாக புள்ளிவிபரங்களை முதல்வர் பார்வைக்குச் சிலர் கொண்டுசென்றனர்.

அந்தச் சமயத்தில், ''ஏற்கனவே நான் நாகர்கோவிலில் வென்று எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளேன்'' என ஆஸ்டின் முதல்வரிடம் கூறி சீட் கேட்டுள்ளார். சில கணக்குகள் ஒத்துவரவே முதல்வர் ஓகே சொல்லிவிட்டார்" என்றனர்.

ஆம்ஸ்ட்ராங்: "என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள்: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு சென்னை தொகுதி; இபிஎஸ் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி தி.மு.க - அ.தி.மு.க என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த... மேலும் பார்க்க

மக்கள் இயக்கம், மாற்றுக்கட்சி, பணபலம்! - விஜய் டிக் அடித்திருக்கும் வேட்பாளர்கள் யார் யார்?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், கட்சி வட்டாரங்களின் வழி நமக்கு கிடைத்த உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.TVK Vijay - தவெக விஜய்உத்தேச வேட்பாளர் பட்டியல் :ப... மேலும் பார்க்க

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது.... மேலும் பார்க்க

'டார்கெட் தலைநகரம்!' - சென்னையில் இறங்கும் தவெகவின் முக்கிய தலைகள்! - வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், 'டார்கெட் தலைநகரம்' என்கிற முடிவோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சென்னைக்குள்... மேலும் பார்க்க

வேடசந்தூர்; செ., பாலாஜி ஆதரவாளருக்கு டிக் அடித்த திமுக; சிட்டிங் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்ட பின்னணி!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செ... மேலும் பார்க்க