செய்திகள் :

நீளிரா: "ஏவுகணைகள் நிகழ்த்தும் போருக்கு இணையானது கருத்தியல் போர்" - இயக்குநர் ராஜூ முருகன்

post image

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரன் இயக்கியுள்ளார். ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் பட டிரெய்லர் கவனம் ஈர்த்து வருகிறது.

‘நீளிரா’ பட முன்னோட்ட நிகழ்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் ராஜூ முருகன், ``உலகில் இன்று ஏவுகணைகளும் குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தும் போருக்கு இணையாக, சத்தமில்லாமல் ஒரு 'கருத்தியல் போர்' நடந்து கொண்டிருக்கிறது. அணுஆயுதப் போரை விடவும் இது மிக முக்கியமானது. இதற்கு உதாரணமாக இஸ்ரேல் தேசம் உருவான வரலாற்றைச் சொல்லலாம்.

நீளிரா படக்குழு
நீளிரா படக்குழு

பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்க 150 ஆண்டுகளுக்கு முன்பே 'சியோனிச' அமைப்புகள் கதைகளை உருவாக்கத் தொடங்கின. 1900-களில் அவர்கள் முதலில் ஒரு வங்கியை நிறுவி, பாலஸ்தீன விவசாயிகளுக்கு நிலத்தின் பெயரில் கடன் கொடுத்து, கடனைத் திருப்ப முடியாமல் போனவர்களின் நிலங்களைப் பறித்து இஸ்ரேலின் பாதி நிலப்பரப்பைக் கையகப்படுத்தினார்கள்.

நிலத்தைப் பறித்த பிறகு அவர்கள் செய்த இரண்டாவது முக்கியமான காரியம் ஒரு 'திரைப்படக் கழகத்தை' உருவாக்கியது. ஒரு தேசத்தை உருவாக்க பணத்திற்கு அடுத்தபடியாக கலைதான் தேவையென்பதை அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தார்கள்.

1913-லேயே இஸ்ரேல் தேசத்தின் அவசியம் குறித்து அவர்கள் ஆவணப்படங்களை எடுக்கத் தொடங்கினர். 1948-ல் இஸ்ரேல் உருவான பிறகு, ராணுவத்தில் 'திரைப்படப் பிரிவு' என்ற ஒன்றையே உருவாக்கினார்கள்.

நீளிரா
நீளிரா

அங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு கையில் ஆயுதப் பயிற்சியும், மறு கையில் திரைப்படக் கருவியும் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக பாலஸ்தீனத்தில் அதிகாரம் இல்லாத போதிலும், சுயேச்சை படைப்பாளிகள் தங்களால் இயன்ற சிறிய கேமராக்களைக் கொண்டு மனிதாபிமானத்தைப் பேசும் எளிய படங்களைத் தொடர்ந்து எடுத்தனர்.

கடந்த 100 ஆண்டுகளாக அந்த நிலப்பரப்பில் இருவேறு கருத்தியல்களுக்கு இடையே பெரும் போர் திரைத்துறையிலும் நடந்து வருகிறது.

அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளும் தங்கள் கலாசாரத்தை உலகிற்குச் சொல்ல சினிமாவைப் பயன்படுத்தின. ஆனால், உலகின் முன்னோடி மொழியான தமிழிலிருந்து அத்தகைய உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை என்பது வருத்தமான உண்மை.

ஈழப் போராட்டம் என்பது உலகம் வியந்து பார்த்த 50 ஆண்டு காலப் போராட்டம். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் வேறு எந்த இனத்திலாவது நடந்திருந்தால், அது குறித்து நூற்றுக்கணக்கான படங்கள் வந்திருக்கும்.

இயக்குநர் ராஜூ முருகன்
இயக்குநர் ராஜூ முருகன்

ஆனால், தமிழில் அப்படி ஒன்றுகூட வரவில்லை. இதற்குத் தணிக்கைக் குழுவின் அரசியல் கெடுபிடிகள், படைப்பாளிகளிடம் உள்ள இறக்குமதி சிந்தனை மற்றும் வியாபாரச் சந்தை ஆகிய மூன்றுமே முக்கியக் காரணங்கள்.

இவ்வளவு பெரிய போர் நடந்தும் உலக அளவில் ஒரு ஈழப் படம் கூட வரவில்லையே என்ற ஏக்கத்தை உடைக்கும் முதல் படமாக நீளிரா இருக்கிறது. ஜான் மகேந்திரன் போன்றவர்கள் ஏற்கனவே முயற்சித்திருந்தாலும், நவீன சினிமாவின் நேர்த்தியோடு எடுக்கப்பட்ட முதல் ஈழ சினிமா இதுதான் என்று நான் சொல்வேன்.

இயக்குநர் சோமிதரனை எனக்கு யாழ்ப்பாண நூலக எரிப்பு குறித்த ஆவணப்படத்திலிருந்தே தெரியும். ஈழத்தின் வலியை உலகிற்குச் சொல்ல வேண்டும் எனத் தொடர்ந்து இயங்கும் அவர், இந்தப் படத்தில் ஒரு வன்முறைக் காட்சி கூட இல்லாமல் ஒரு மாபெரும் யுத்தத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

தணிக்கைக் குழுவிடமிருந்து இந்தப் படத்தை மீட்டு வந்த அவரது புத்திசாலித்தனம் வியக்கத்தக்கது. மிக முக்கியமாக, இந்தப் படம் எந்த இடத்திலும் வெறுப்பை (Hate) விதைக்கவில்லை.

கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ்

சொந்த மக்கள் சாகக் கூடாது என்று நினைக்கும் போராளிகள், சமாதானத்திற்காக வந்தோம் என்று சொல்லும் இந்திய அமைதிப்படை என அனைத்துத் தரப்பு நியாயங்களையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். வெறுப்புக்கு எதிராக மனிதாபிமானத்தைப் பேசுவதே இன்றைய படைப்பாளிகளின் கடமை.

ஈழ அரசியல் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத ஒருவரைக்கூட, ஒரு சிறந்த 'திரில்லர்' படமாக இந்தப் படம் கட்டிப்போடும். கார்த்திக் சுப்பராஜ் போன்ற ஒரு தயாரிப்பாளர் முன்வராதவரை இதுபோன்ற படங்கள் சாத்தியமில்லை. இந்தப் படத்தை ஒரு சிறந்த சினிமாவாக தமிழுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் அளித்த இயக்குநர் சோமிதரன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்

அமைதிப்படை: "ஒரு பிரதமர் நடித்த ஒரே படம்; விஜய் குறிப்பிட்டு பேசிய அந்த விஷயம்" - பகிரும் சத்யராஜ்

சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில், 1994-ல் வெளிவந்த 'அமைதிப்படை' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. ரீரிலீஸ் டிரெண்டில், பல கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டுக் கொண்டி... மேலும் பார்க்க

நீளிரா: "எங்கு சென்றாலும் அந்த ஈழத்தை அவர்களால் உருவாக்க முடியும்" - இயக்குநர் வெற்றி மாறன்

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இலங்கைத்... மேலும் பார்க்க

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

Happy Raj Review: கலகலக் காதலோடு ஒரு சோசியல் மெசேஜ்; ஆனாலும் 'ஹேப்பி ராஜ்' சறுக்கியது எப்படி?

ஊரில் உள்ள பலராலும் உருவக் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் காத்த முத்து ( ஜார்ஜ் மரியம்). தன் தந்தையால் தானும் கேலி செய்யப்படுக்கிறார் காத்த முத்துவின் மகன் ஹேப்பி ராஜ் ( ஜி.வி பிரகாஷ் குமார்). தான் நேசிக்... மேலும் பார்க்க

Kara Exclusive: 'ஆட்டத்தைத் தொடங்கிட்டான் கரசாமி' - தனுஷின் 'கர' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ்

Kara Movie exclusive: “நம்பியவர்களைக் கரைசேர்க்கும் கரசாமி தனுஷ்!” - ‘கர’ எக்ஸ்க்ளூசிவ் மேலும் பார்க்க