செய்திகள் :

LIK: "ஏப்ரல் சரி... எந்த ஏப்ரல்?" - மீண்டும் தள்ளிப்போன ரிலீஸ்; உறுதியான ரிலீஸ் தேதி எப்போது?

post image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்.ஐ.கே' திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன் பிறகு படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பிப்ரவரி மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் படம் ரிலீஸ் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.

LIK - BTS - Vignesh Shivn
LIK - BTS - Vignesh Shivn

அதனைத் தொடர்ந்து குட் ஃப்ரைடே அன்று படம் வெளியாகும் எனச் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார், இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையாததால், ரிலீஸ் தள்ளிப் போகிறது எனப் பேசப்பட்டது. மீண்டும் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது எனப் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். 'Trust Me Bro' என்பதைக் குறிப்பிட்டு ஒரு புரோமோ காணொளி மூலமாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

அனிருத், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் என மூவரும் சேர்ந்து நகைச்சுவையாக படத்தின் ரிலீஸ் தேதியை இந்தக் காணொளியில் அறிவித்திருக்கிறார்கள்.

குட் ஃப்ரைடே ரிலீஸ் என விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸை மாற்றியிருக்கிறார்கள்.

கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கெளரி கிஷன் எனப் பலரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'நானும் ரெளடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

அமைதிப்படை: "ஒரு பிரதமர் நடித்த ஒரே படம்; விஜய் குறிப்பிட்டு பேசிய அந்த விஷயம்" - பகிரும் சத்யராஜ்

சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில், 1994-ல் வெளிவந்த 'அமைதிப்படை' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. ரீரிலீஸ் டிரெண்டில், பல கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டுக் கொண்டி... மேலும் பார்க்க

நீளிரா: "ஏவுகணைகள் நிகழ்த்தும் போருக்கு இணையானது கருத்தியல் போர்" - இயக்குநர் ராஜூ முருகன்

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இலங்கைத்... மேலும் பார்க்க

நீளிரா: "எங்கு சென்றாலும் அந்த ஈழத்தை அவர்களால் உருவாக்க முடியும்" - இயக்குநர் வெற்றி மாறன்

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இலங்கைத்... மேலும் பார்க்க

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

Happy Raj Review: கலகலக் காதலோடு ஒரு சோசியல் மெசேஜ்; ஆனாலும் 'ஹேப்பி ராஜ்' சறுக்கியது எப்படி?

ஊரில் உள்ள பலராலும் உருவக் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் காத்த முத்து ( ஜார்ஜ் மரியம்). தன் தந்தையால் தானும் கேலி செய்யப்படுக்கிறார் காத்த முத்துவின் மகன் ஹேப்பி ராஜ் ( ஜி.வி பிரகாஷ் குமார்). தான் நேசிக்... மேலும் பார்க்க

Kara Exclusive: 'ஆட்டத்தைத் தொடங்கிட்டான் கரசாமி' - தனுஷின் 'கர' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ்

Kara Movie exclusive: “நம்பியவர்களைக் கரைசேர்க்கும் கரசாமி தனுஷ்!” - ‘கர’ எக்ஸ்க்ளூசிவ் மேலும் பார்க்க