செய்திகள் :

`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்..!’ - புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி

post image

புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பில், `புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், ஜெனரேட்டர்கள் போன்றவை பொது சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஒழுங்குக்கு இடையூறாக உள்ளன.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

அதனால் குப்பைத் தேக்கம், கொசு உற்பத்தி, தொற்று நோய்கள் பரவல் அபாயம் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, இத்தகைய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ளுமாறு தினசரி நாளிதழ் மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக அகற்றி, தங்களது சொந்த இடங்களில் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அந்தக் காலக்கெடுவுக்குள் அகற்றப்படாத வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், புதுச்சேரி நகராட்சி சட்டம், 1973-ன் விதிகளின்படி, போக்குவரத்துக் காவல்துறையின் உதவியுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி அப்புறப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு நோட்டீஸ்கள் உழவர்கரை நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் ஒட்டப்பட்டது. ஆனாலும், பல இடங்களில் அவை அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உழவர்கரை நகராட்சி

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் பொதுமக்கள், மாணவர்களின் போக்குவரத்து மற்றும் சுகாதார நலம் கருதி கைவிடப்பட்ட ஒன்பது வாகனங்கள் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அவர்களின் நேரடி மேற்பார்வையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், உழவர்கரை துணை வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வாகன உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. அதனால் இனி எந்த கால அவகாசமும் கொடுக்க முடியாது. அவர்கள் உரிய அபராதத்தை செலுத்திவிட்டு, இனி வாகனத்தை சாலையில் நிறுத்தமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வாகனத்தை மீட்டுச் செல்ல வேண்டும். அது தவறும் பட்சத்தில் விதிகளின்படி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிரிழப்பு!

ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அ... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் - இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!

மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க.''நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது'' எ... மேலும் பார்க்க

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க