செய்திகள் :

"சினிமாவில் இருக்கக்கூடிய அதே சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே.!"- குஷ்பு ஆவேசம்

post image

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அந்த பரப்புரையில் "வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்.

எந்த அரசியல் பிரச்னைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென வந்துவிட்டால் மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?

நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள். ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?.

உங்கள் மனைவி 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?" என்று சுந்தர் சியை பிரகாஷ் ராஜ் சாடியிருந்தார்.

அதேபோல பிடிஆரும் குஷ்பு, சுந்தர் சியை சங்கி, சினிமா கூத்தாடி என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்புவிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " பிரகாஷ் ராஜுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அவர் என் நண்பர் தான். குஷ்பு கட்சி மாறியது மட்டும்தான் தெரியுமா? பிடிஆர் இருக்கக்கூடிய கட்சியில், திமுகவிலே பிறந்து திமுகவிலே வளர்ந்தவர்கள் தான் இருக்கிறார்களா?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ரகுபதி, சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் என சிலர் எல்லாம் அதே கட்சியில் பிறந்து அதே கட்சியில் வளர்ந்தவர்களா என்று நான் கேட்கிறேன். பிரகாஷ் ராஜ் தேர்தலில் டெபாசிட் கூட இல்லாமல் தோற்று போனார்.

அவர் அரசியலில் என்ன செய்துவிட்டார். எங்களைப் பார்த்து சங்கி, சினிமா கூத்தாடி என்று சொன்ன பிடிஆருக்கு அதே சினிமாவில் இருக்கக்கூடிய சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே பிரசாரம் செய்கிறார்கள்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

`கரூர் விஷயத்துக்கு வரேன்... நான் போலீஸ் கொடுத்த டைம்க்குதான் வந்தேன்.!' - விஜய் ஓப்பன் டாக்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றியிருந்தார்.விஜய் பேசியதாவது, ``தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்க... மேலும் பார்க்க

'ஸ்டாலின் தன் தந்தை கலைஞரை சாகும்வரை கவனித்துக்கொண்டார்; ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளை'- ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் ... மேலும் பார்க்க

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ - வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங... மேலும் பார்க்க

`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனா... மேலும் பார்க்க