செய்திகள் :

"சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு" – வானதி சீனிவாசன் காட்டம்

post image

கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பெண்களும், இளைஞர்களும் அதிகளவு வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியிலும், தி.மு.க இன்று காலை வரை கோல்ட் காயின், சில்வர் காயின் என டிராமா பண்ணுகிறது. ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி 6 மாத காலமாகப் போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் கமிசன் கண்ணில் மண்ணைத் தூவி அராஜாகம் நடந்து கொண்டு இருக்கின்றது. தூங்கி கொண்டு இருப்பவர்களை எழுப்பி கோல்ட் காயின், சில்வர் காயின் என ஏமாற்றி வருகின்றனர். கோவை மாநகராட்சியில் இதே மாதிரி டிராமா செய்தார்கள். ஆட்சி மாற்றம் நிச்சயமாக வேண்டும், மக்கள் இதைச் செய்வார்கள்” என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் டிரஸ் கோட்டில் வந்து வாக்களித்தது குறித்த கேள்விக்கு, “விஜய்யோட டிரஸ் கோடு என்பது காமன். டிரஸில் என்ன இருக்கிறது. இளைஞர் சக்தியால் எதுவும் முடியும். இன்ஸ்டா, சமூக ஊடகத்தில் இருப்பது அல்ல அரசியல். 2 மணி நேர சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு. இன்ஸ்டா என்பது ஒரு டூல். முடிவெடுப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும்” எனப் பதிலளித்தார்.

"வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்தது குறியீடா?" – அண்ணாமலை விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவ... மேலும் பார்க்க

‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,065 இடங்களில் 3,540 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 182... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தங்கள் வாக்கினைத் தங்களுக்கே செலுத்த முடியாத பிரதான கட்சி வேட்பாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகி... மேலும் பார்க்க

தேனி: பழங்குடி மக்கள் வாக்களிக்க குதிரையில் பயணம் போன EVM இயந்திரங்கள்! | Photo Album

பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: ... மேலும் பார்க்க

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்! வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்! வாக்குபதிவு முன்னேற்பாடுகள்! மேலும் பார்க்க

TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் தமிழ்நாடு!

2026 சட்டமன்றத் தேர்தல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக இதுவரை தொடர்ந்து... மேலும் பார்க்க