ஆர்வத்துடன் ஜனநாயகக் கடமை ஆற்றிய இளம் தலைமுறை வாக்காளர்கள் - Polling Day Clicks
"அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டால், அரசியல் நம் வாழ்க்கையில் தலையிடும்" - லெனினை மேற்கோள்காட்டிய SK
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ஆர்த்தியும் இன்று காலை வாக்களித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், "'அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்' என்று புரட்சியாளர் லெனின் சொல்கிறார்.
நாம் அரசியலில் தலையிடுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் வாக்களிப்பது தான். அது ஜனநாயகக் கடமை, பொறுப்பு என்று சொல்லலாம். அதை நிறைவேற்றுவதற்காக வந்து நான் வாக்களித்துவிட்டேன்.
இன்றைய நாள் ஓய்வு நாள் என்று நினைக்காமல் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று நினையுங்கள்.
அதனால் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். அதனை எல்லோரும் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.
ஓட்டு என்கிற ஒரு விஷயம் மட்டும்தான் நாம் அனைவரும் கிடைக்கும் சமமான ஒன்றாக இருக்கிறது.
ஏழையாக இருந்தாலும் ஒரு ஓட்டுதான், பணகாரராக இருந்தாலும் ஒரு ஓட்டுதான்.

வேட்பாளர்கள் யார், யார் என்று தெரிந்துகொண்டுதான் வாக்களிக்க வந்தேன். என் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறேன்.
மிகவும் எக்சைட்டிங்கான தேர்தலாக இது இருக்கிறது. இந்தத் தேர்தலில்தான் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க நானும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.















