சின்னமனூரில் செங்கரும்பு அறுவடைப் பணி மும்முரம்
தைப்பொங்கலை முன்னிட்டு, சின்னமனூா் பகுதிகளில் செங்கருப்பு அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டத்தில் சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கரில் செங்கரும்பு விவசாயம் நடைபெறுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களே உள்ள நிலையில், செங்கரும்பு அறுவடைப் பணி மும்முரமாக நடைபெற்று வருகினறன.
ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்படும் இந்தக் கரும்புகளை மதுரை, திண்டுக்கல், விருதுநகா், நெல்லை, திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆா்வத்துடன் கொள்முதல் செய்கின்றனா்.