செய்திகள் :

"பவள விழா பாப்பா... பழைய டப்பா... திமுக குறள்!" - திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்

post image

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், "தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம். இன்னைக்கு நாம அரசியலுக்கு வந்ததும் நம்மள விமர்சிக்கிறாங்க, `அன்னைக்கு எம்.ஜி.ஆர் வந்தார் என்று சொன்னால் அவர் பல வருடங்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

தவெக விஜய்
தவெக விஜய்

விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கு' என இன்னைக்கு நம்மை விமர்சிக்கிறவங்க தான் அன்னைக்கு அதே எம்.ஜி.ஆரையும் கவர்ச்சி தவிர வேற ஒன்னும் இல்லனு விமர்சிச்சாங்க.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, அவர் தொண்டர்களையும் விட்டுவைக்கல. ஆன மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்க....இப்பவும் அதே தேஞ்சுபோன விஷயத்தை தூக்கிட்டு வருவாங்க... டெக்னாலஜி எல்லாம் வளர்ந்துட்டு வருது... கொஞ்சம் அப்டேட் ஆகுங்க.

இன்னைக்கு இருக்கிற டிஜிட்டல் உலகத்துல திருவள்ளுவர் இருந்திருந்தா 'அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம்

திமுக முதற்றே உலகு'

என்று எழுதியிருப்பாரு.

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டாங்க. 2026 தேர்தலில் தவெக தான் ஒரே ஆப்ஷன். நோ டைவர்ஷன். அவங்கள எதிர்த்தா மோசமா விமர்சிப்பாங்க...

தவெக விஜய்
தவெக விஜய்

நாம அவங்க செய்யுற ஊழலை பேசினா அவங்க அதே பழைய டப்பாவா உடனே எடுத்து உருட்டுவாங்க. பவள விழா பாப்பாவுக்கு வேற என்ன தெரியும். பழைய டப்பாவை உருட்ட தான் தெரியும்.

அதுக்காக நாம சொல்லாம இருக்க முடியுமா? சொல்லிதான் தான் ஆகணும். நாம தான் மக்கள் சக்தி" என திமுகவை விமர்சித்திருக்கிறார்.

தொடர்ந்து, ``நம்ம மக்கள் இந்த விசிலை ஊதுறதுல தீய சக்தியும் ஊழல் சத்தியும் தெறிச்சு ஓடும்.

தேர்தல்ல மூன்று முனை போட்டி, நான்கு முனை போட்டி என்கிறார்கள்... சொல்றவங்க சொல்லிட்டு இருக்கட்டும்.

ஒரு பக்கம் மக்கள் சக்தியுடன் தவெக,

இன்னொரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்

அப்புறமா, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி" என அதிமுகவை விமர்சித்தார் விஜய்.

'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம். "இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்று இந்தியப் பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார். உடனடியாக எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட முடியாது. ஆனால், மெல்ல மெல்... மேலும் பார்க்க

விஜயகாந்தின் முதல் தேர்தல்: எம்.ஜி.ஆர் வாகனமும் அதிமுக-வை சிதறடித்த தொண்டர் படையும்! | முதல் களம் 4

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின்... மேலும் பார்க்க

Budget 2026: ``இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.இந்த நிலையில் பட்ஜெட்டை வரவ... மேலும் பார்க்க