செய்திகள் :

சிம்மம் |2026 ராகு-கேது பெயர்ச்சி : உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் - 11 பலன்கள்| கே.பி.வித்யாதரன்

post image

1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் மனச்சோர்வுகள் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். செயல்களில் உத்வேகம் பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிம்மம்

2. வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். மகளின் திருமணம், மகனின் வேலை சார்ந்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பொன் - பொருள் சேர்க்கை மனதுக்கு மகிழ்ச்சி தரும். சகோதரர்களுடனான பிணக்குகள் விலகும்; அவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

3. தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். சபையில் உங்கள் வாக்குக்கு மரியாதை அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள்.

4. ராகு பகவான் டிசம்பர் 5 முதல் அடுத்த வருடம் மார்ச் 11 வரையிலும் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது, உங்களின் சொல்வாக்கு செல்வாக்கு பெறும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.

5. அடுத்த வருடம் மார்ச்-11 முதல் டிசம்பர் மாதம் மத்திமப் பகுதி வரையிலும் சந்திரனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது, செலவுகளால் திணற நேரிடும். ஆகவே, அதற்கு முன்னதாகவே திட்டமிட்டுச் செயல்படவேண்டும். அடுத்து 2028 ஜூன் வரையிலும் சூரியனின் நட்சத்திரத்தில் அவர் சஞ்சரிக்கும்போது, மறைமுக எதிர்ப்புகளும் தடைகளும் விலகும்.

6. உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமரும் கேது ஏமாற்றங்கள், தடைகளை அகற்றுவார். கோபம், தயக்கம், தடுமாற்றம் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் புரிந்துகொள்வீர்கள்.

7. தடைப்பட்டுக் கொண்டிருந்த மகனின் திருமணம் இப்போது சிறப்பாக முடியும். எனினும், தந்தைவழி உறவினர்களிடையே மனக்கசப்பு வந்து போகும். கோயில் திருப்பணிகளுக்கு பங்களிப்புச் செய்வீர்கள். உழவாரப் பணிகள், அன்னதானம் என்று களமிறங்குவீர்கள்.

8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) மனதில் நினைத்தது நிறைவேறும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

9. சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, தடைப்பட்ட காரியங்களில் வெற்றியுண்டு. குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) புகழ், செல்வாக்கு கூடும்.

10. இல்லத்தரசிகளுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரிகள், போட்டிகளைத் தகர்த்தெறிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கடல் சார்ந்த உணவு வகைகள், கட்டட உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் மூலம் லாபம் ஈட்டுவீர்கள்.

11. உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. மேலதிகாரி ஆதரவாக இருப்பார். கணினித் துறையினருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு அமையும். கலைத் துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி |2026 ராகு-கேது பெயர்ச்சி: திடீர் யோகம் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எனினும், சொந்த பந்தங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எவ்விதமான பிரச்னைகளையும் பேசித் தீர்க்கப் பாருங்கள். குடும்பத்த... மேலும் பார்க்க

கடகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: பணவரவு திருப்தி; பேச்சில் கவனம்.! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் குடும்பத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் பெருகும். நல்ல வேலை கிடைக்கும். எனினும், எதிலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஜாமீன், கேரண்டி என்று கையெ... மேலும் பார்க்க

மிதுனம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: பேச்சில் கவனம்; அலட்சியம் கூடாது - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சிக்காலத்தில் தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வர வாய்ப்பு உண்டு. பூர்விகச் சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். பாதியிலேயே நின்றுபோன காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும்.ரா... மேலும் பார்க்க

ரிஷபம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: அகலக்கால் கூடாது; வீடு வாங்குவதில்.! 11 பலன்கள்| கே.பி.வித்யாதரன்

ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவானவர். மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களுக்கு இந... மேலும் பார்க்க

மேஷம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி : பதவி-பொறுப்புகள் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. ஆகவே, இன்ப- துன்பங்களில் பதறாத வகையில் சூரியனின் சத்வ குணத்தையும், செயல்வேகத்துடன் ஈடுபடும் வகையில் செவ்வாயின் ரஜோ குணத்தையும் கொண்டவர் நீங்கள்.... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் : நவ 27 முதல் டிச 3 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க