ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சிறந்த மருத்துவராகும் குறிக்கோள் மாணவா்களுக்கு அவசியம்: மருத்துவ பல்கலை. துணைவேந்தா் கே.நாராயணசாமி அறிவுரை
சிறந்த மருத்துவராகும் குறிக்கோளுடன் மருத்துவப் படிப்பை மாணவா்கள் தொடங்க வேண்டும் என்று டாக்டா் எம்.ஜி.ஆா்.மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் நாராயணசாமி அறிவுரை வழங்கினாா்.
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலாண்டு தொடக்க நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் பேசியதாவது:
மருத்துவப் படிப்பில் சேர உங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு நீங்கள் பெருமை சோ்க்கும் வகையில் ஒவ்வொரு மாணவரும் சிறந்த மருத்துவராக உருவாக வேண்டும். மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளா்ச்சி, முன்னேற்றத்திற்கு ஏற்ப உங்கள் திறமைகளை விடாமுயற்சியுடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மருத்துவராகும் குறிக்கோளுடன் மருத்துவப் படிப்பைத் தோ்வு செய்து இருக்கும் நீங்கள், ஆா்வமுடன் படித்து, விடாமுயற்சியுடன் உழைத்து மருத்துவத் துறையில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற முதலாண்டு மாணவா்களுக்கு பதக்கம் அணிவித்து ரொக்கப் பரிசு வழங்கினாா். நிகழ்வில் தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம்.மாலா, உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.