செய்திகள் :

`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

post image

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து கைபேசி, பென் டிரைவ் மற்றும் ஒரு குறிப்பேடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் சிறை அறைக்குள் கைபேசி எப்படி வந்தது என்பது குறித்து சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டி.ஐ.ஜி. ஜினேந்திர கனகவி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna)
பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna)

சிறைக்குள் இந்தச் சாதனம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அதை வழங்கியது யார், எவ்வளவு காலம் பயன்பாட்டில் இருந்தது மற்றும் சிறை அதிகாரிகள் அல்லது பிற ஊழியர்கள் இதற்குக் உடந்தையாக இருந்தனரா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராயுமாறு விசாரணை குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உதவி கண்காணிப்பாளர் இரன்னா ரங்காபூர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களின் தொலைபேசி எண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. புலனாய்வாளர்கள் அந்த எண்களையும், கைபேசியிலிருந்து பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சிறைக்குள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கைபேசி கடந்த மார்ச் மாதத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது என்றும், இன்னும் பல கைபேசிகள் சிறைக்குள் கடத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

பணம் பெற்றுக்கொண்டு சிறை அதிகாரிகளே கைபேசியைப் பயன்படுத்த உதவியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் சோதனையிட வந்தபோது சிறை வளாகத்திற்குள் நுழைய தாமதம் ஏற்பட்டதாகவும், அந்தச் சமயத்தில் சிறை ஊழியர்களும் கைதிகளும் எச்சரிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனிடையே, ரேவண்ணா கைபேசியைப் பெற உதவிய எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருக்கிறது.

இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் பாதுகாப்புப் பிரிவுகள் 1, 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேலும் மூன்று கைபேசிகளும் இரண்டு பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டு, பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சாதனங்களில் ஆபாசமான அல்லது ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் இருந்ததாக வெளியான தகவல்களை எலக்ட்ரானிக் சிட்டி பிரிவு துணை ஆணையர் எம். நாராயணா மறுத்துள்ளார். அதே சமயம், சிக்னல் ஜாமர்களைத் தாண்டி குறிப்பிட்ட வகை ஆண்ட்ராய்டு போன்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்துத் தொழில்நுட்பத் தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திர... மேலும் பார்க்க

உதவிய காதலன்; மயக்க மருந்து கலந்து கொடுத்து மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிக... மேலும் பார்க்க

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் 'ஃபியா' (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 'குக்கீ ஸ்டஃப்பிங்' (Cookie stuffin... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடியில் கிடைத்த ரூ.10 கோடி; 5435 வங்கி கணக்குகளுக்கு மாற்றிய சோசியல் மீடியா பிரபலம் கைது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட ஒரு கும்பல் புனேயைச் சேர்ந்த முதியவரை டிஜிட்டலில் கைது செய்து ரூ.10 கோடியைப் பறித்தது. முதியவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு பணிமுடித்துவிட்டு இ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டிய மனைவி; தலைமுடியைப் பிடித்து இழுத்து அறுத்துக் கொன்ற கணவன் - அம்பத்தூரில் அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னா. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி வைதேகி (34). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வைதேகியும் சின்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்... மேலும் பார்க்க