செய்திகள் :

சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி!

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு பணிமுடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நெல்லூர்பேட்டை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த தாமரைச்செல்வி, ஏரிக்கரை அருகே சென்றபோது மறைந்திருந்த அவரது கணவன் அர்வின் தாமரைச்செல்வியை மடக்கி கத்தியால் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலில் நிலைக்குலைந்துபோன தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ரத்தம் பீறீட்டு கொட்டியதில் காவலர் சீருடையே நனைந்துபோயிருக்கிறது.

பெண் போலீஸ் கொடூரக் கொலை

இதுபற்றி, தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனிடையே, தாமரைச்செல்வியை கொலை செய்ததாகக் கூறப்படும் அவரின் கணவன் அர்வின் தன்னைத் தானே மார்பு பகுதியில் கத்தியால் தாக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதியானதாகவும் தெரியவந்திருக்கிறது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட தாமரைச்செல்விக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பேரதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்டோ ஓட்டிய மனைவி; தலைமுடியைப் பிடித்து இழுத்து அறுத்துக் கொன்ற கணவன் - அம்பத்தூரில் அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னா. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி வைதேகி (34). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வைதேகியும் சின்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்... மேலும் பார்க்க

மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி - போலீஸ் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி சென்று திரும்பி வந்த 8 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுமிக்கு பாலியல் கொடும... மேலும் பார்க்க

உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை - பெரம்பலூர் சோகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், சோபனா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து ... மேலும் பார்க்க

திருச்சி: சமயபுரத்தில் தொடர் வாகனத் திருட்டு; 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில், சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந... மேலும் பார்க்க

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்... மேலும் பார்க்க