செய்திகள் :

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் சத்தியமூர்த்தி (60). அடுத்த மாதத்தில் பணிநிறைவு பெற்று, அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற இருந்த நிலையில், அவரது கடைசி காலப் பணிக்கு அவரே கறையை ஏற்படுத்தி, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரது மகன், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காதல் ஜோடியை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளார் சத்தியமூர்த்தி.

பின்னர், இப்பிரச்னையைச் சுமுகமாக முடித்து வைப்பதற்காகத் தெய்வேந்திரனிடம் 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, 5,000 ரூபாயை 'ஜி-பே' மூலம் தனது கணக்கிற்கு அனுப்பச் செய்துள்ளார்.

மீதமுள்ள 3,000 ரூபாயைச் செலுத்தக் கோரி சத்தியமூர்த்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த தெய்வேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறையினரை அணுகிப் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனப் பவுடர் தடவப்பட்ட 3,000 ரூபாய் நோட்டுகளைத் திருப்புவனத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வைத்து சத்தியமூர்த்தியிடம் தெய்வேந்திரன் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சத்தியமூர்த்தியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவிருந்த அதிகாரி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பட்டா மாறுதலுக்குப் பணம் வாங்கிய தலையாரி

இதே போன்று திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வந்தவர் கணேசன் (56). அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படைக் காவலர் ஒருவர், தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் கோரி கணேசனை அணுகியுள்ளார். சட்டப்படியாகச் செய்ய வேண்டிய இப்பணிக்கு, கணேசன் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த ஊர்க்காவல் படைக் காவலரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரை நாடினார். அங்கும் திட்டமிட்டபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து கணேசனிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இப்படி ஒரே நாளில் ஒரே ஊரில் அடுத்தடுத்து லஞ்சப் புகாரில் அரசு ஊழியர்கள் சிக்கிய சம்பவம், சிவகங்கை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் திமுக அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு; 2,000 நாள்களைக் கடந்த அன்னதானம்!

வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உ... மேலும் பார்க்க

`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!' - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்தக் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க

`ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு; இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து வாங்குங்க.!'- விஜய்யின் முழு உரை

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர்... மேலும் பார்க்க

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்?

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க

'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி... மேலும் பார்க்க

காமெனி இறுதி ஊர்வலத்தில் ஒலித்த மரண முழக்கம்! - அமெரிக்காவை போருக்குள் இழுக்க இஸ்ரேல் வழங்கிய தகவல்?

ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவர் அலி காமெனியின் ஒரு வார கால இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல, ஈரான் மீண்டும் சதித்திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் ப... மேலும் பார்க்க