செய்திகள் :

சிவகாசி: திருமணம் மீறிய உறவு; 3 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூரன்- நடந்தது என்ன?

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி  என்பவருக்கும்  சுவாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இவர்களுக்கு 3 வயதில் விஷ்ணுபிரியா என்ற பெண் குழந்தை இருந்தது.  சுவாதி, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த போது தன்னுடன் வேலை பார்த்த விக்னேஸ்வரன்  என்ற இளைஞருடம் பழக்கம் ஏற்பட்டு அது  திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது.

கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன்

இதையடுத்து  தனது கணவர் துரைப்பாண்டியனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த சுவாதி தனது குழந்தை விஷ்ணு பிரியாவுடன்,   விக்னேஸ்வரனோடு சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பசும்பொன்நகரில் தனியாக வாடகை வீட்டில் கடந்த 25 நாட்களாக வசித்து வந்துள்ளனர்.  குடிப்பழக்கத்திற்கு ஆளான விக்னேஸ்வரன், தினமும் மது அருந்திவிட்டு சுவாதியுடன் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுறது.  

இருவருக்குள் ஏற்பட்ட தகராறால்  ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், சுவாதியின் 3 வயது பெண் குழந்தை விஷ்ணு பிரியாவின் தலைமுடியை பிடுங்கியும், முகத்தை நகத்தால் கீறியும், வயிற்றில் தாக்கியும் கொடூரமான முறையில் குழந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.  இதில், குழந்தை  விஷ்ணுபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் குழந்தை விஷ்ணு பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூராய்விற்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல்

இக்கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது திருமண உறவிற்கு மூன்று வயது பெண் குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ள போலீஸார், அக்குழந்தையின் தாய் சுவாதியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கொடுமை; வீடியோ வெளியிட்ட விருதுநகர் சிறுவன் - மீட்ட குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ராமன்பறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மார்கெட்டிங் நிறுவனத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். முதலில் மேற்பார்வ... மேலும் பார்க்க

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆய்வகப் பொறுப்பாளர் போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராக காட்பாடி கீழ்வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்... மேலும் பார்க்க

திருடு போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்; CCTV-யால் சிக்கிய எலி; இன்ஸ்டாவைக் கலக்கிய திருட்டு!

கர்நாடகா மாநிலம் துமகுரு என்ற இடத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் விஷ்வாஸ். இவர் முதல் நாள் இரவு கடையை அடைத்து மறுநாள் வந்து கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனித்தபோது கடையிலிருந்த வைரக்கல் பதித்த தங்க ஆப... மேலும் பார்க்க

இளையான்குடியில் போதை பொருள் தயாரிப்பு ஆய்வகம் கண்டுபிடிப்பு - கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது!

ராமநாதபுரம் காவல்துறையின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 27-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டி அருகே திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்த்... மேலும் பார்க்க

உருளைகிழங்கு மூடைகளுடன் கடத்தி வரப்பட்ட கஞ்சா பார்சல்கள் - 3 பேரை கைது செய்த க்யூ பிரிவு போலீஸ்!

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, வலி மாத்திரைகள் மற்றும் மெத்தமைன், ஐஸ் போன்ற போதை மருந்துகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவ... மேலும் பார்க்க

ஈரோடு:‌ 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கிய கடத்தல் கும்பல்; வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

'சந்தனக் காடு' என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன. இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங... மேலும் பார்க்க