செய்திகள் :

சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. மேயர் இதுவரை சிவகாசி மாநகராட்சி பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில்லை,” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சிவகாசி மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சி கூட்டம்

அதேபோல், 9வது வார்டு கவுன்சிலர் சுதாகரன் பேசுகையில், “மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் காலாவதியானவை. இவ்வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், அது ஆணையர் மீது கொலை வழக்காக பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக அனைத்து வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

மேலும், 7 மற்றும் 8வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, “மாநகராட்சியில் வீட்டு வரி ரசீது போடுவதற்கே 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகின்றது. இதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வெளிக்கொணர வேண்டும்,” எனக் கூறினர்.

சிவகாசி மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சி கூட்டம்

மாநகராட்சியின் அலட்சியம் மற்றும் லஞ்சம் காரணமாக திமுக அரசுக்கு மக்கள் மனதில் கெட்டபெயர் ஏற்பட்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும்,” என அவர்கள் எச்சரித்தனர்.

``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணி... மேலும் பார்க்க

கொடநாடு கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா* வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? * "ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும்... மேலும் பார்க்க

``நடிகர் விஜய் பலவீனமானவர், பிரச்னை வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'' - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது. ... மேலும் பார்க்க

``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 7) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.“2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார். கூட்டணிக்கு மத... மேலும் பார்க்க

ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.தென் கொரிய... மேலும் பார்க்க