செய்திகள் :

ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?

post image

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.

தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

Xi Jinping - Trump Meeting
Xi Jinping - Trump Meeting

இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர்.

அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார்.

கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

Trump - Xi Jinping
Trump - Xi Jinping

அப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங்.

சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை.

சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

அரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது.

சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

`சிலையா, அரசியலா?’ - பட்டுக்கோட்டை அரசுப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டைப் போடுவது யார்?

பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டு பழமையானது. தற்போது சுமார் 2,500 மாணவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர்... மேலும் பார்க்க

சிவகாசி: `வீட்டு வரி ரசீதுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம்' -கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். கூட்டத்தில் பேசிய 6-வது வ... மேலும் பார்க்க

``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு தான் ஓட்டு கேட்க வருவேன்'' - சுரேஷ்கோபி சூளுரை

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.பி-யும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி, கேரள மாநிலத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.“கலுங்கு சௌகரித சம்வாத ய... மேலும் பார்க்க

``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தே... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்ச... மேலும் பார்க்க

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன.JNU Students Electionடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ... மேலும் பார்க்க