செய்திகள் :

பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு!

post image

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்றைய நாள் முடிவில் பதிவான வாக்கு சதவீதம், பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பதிவாகியுள்ளது. மொத்தமாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை அதிகபட்சமாக 2000-ஆம் ஆண்டு 62.57 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில், இங்கு 1998-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 64.6 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட 8.46 சதவிகித வாக்குகள் நேற்று அதிகமாக பதிவாகின.

இவ்வாறு பீகார் தேர்தல் வரலாற்றில் அதிக சதவீத வாக்குகள் பதிவானதற்கு, இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025

அதேபோல், பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கியிருக்கும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், “கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகியிருப்பது பீகாரில் மாற்றம் வருவதைக் குறிக்கிறது. நவம்பர் 14-ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாள்) புதிய அமைப்பு நிறுவப்பட உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கும் இந்த வாக்குப்பதிவு, SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பிய பேச்சுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வாக்குகள் பதிவான தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மதுரைக்கு வந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, “புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜனவரி 7ஆம் தே... மேலும் பார்க்க

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன.JNU Students Electionடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ... மேலும் பார்க்க

"நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம்" - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர்.நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரா... மேலும் பார்க்க

` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.இதில், தே... மேலும் பார்க்க

பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் த... மேலும் பார்க்க