செய்திகள் :

Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?

post image

ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன.

சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் பேசியதை அடுத்து, இது இன்னமும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை பிரபலமாகிவிட்டது.

ஆப்பிள் சிடர் வினிகர்; பயன்கள் என்னென்ன?
ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்!

ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்?

ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவதில் உண்மையில் என்ன பயன்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்:

ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்து முகம் கழுவி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவடையும். (ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது)

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். (ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்)

Apple Cider Vinegar
Apple Cider Vinegar

ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம்.

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம். நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது.

Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா?

Doctor Vikatan: நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக இரவில் தூக்கமே இல்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே கனவாகிவிட்டது. தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும், மீண்டும் ... மேலும் பார்க்க

பிரண்டைக்கீரை முதல் பசலைக்கீரை வரை - மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் தகவல்கள்!

''கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தருகிற டானிக்'' என்கிற சித்த மருத்துவர் கு. சிவராமன், இங்கே சில கீரைகள் நமக்கு தருகிற ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறார். கீரைகளின் மரு... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவேஇருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாகஇருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, ... மேலும் பார்க்க

சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான்கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும்போதெல்லாம் பிரெகன்சிகிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் க... மேலும் பார்க்க