Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cide...
BB Tamil 9: "எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!"- கலங்கிய விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர்.
இந்த 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' டாஸ்க்கில் மேனேஜர் ஆக செயல்பட்ட திவ்யா கணேஷ் மீது ஹவுஸ் மேட்ஸ் குற்றம் சாட்டிருந்தனர்.

'பொறுமை தேவை, நிதானம் தேவை', 'ரொம்ப கடுமையாக நடந்துக்குறாங்க', 'நீங்க வந்து அப்படி என்ன பண்ணிட்டீங்க', 'டீமை எப்படி வழி நடத்தணும்'னு தெரியல' என ஹவுஸ் மேட்ஸ் திவ்யாவை சாடி இருந்தனர்.
இதனையடுத்து விக்கல்ஸ் விக்ரமிற்கு மேனேஜர் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் விக்கல்ஸ் விக்ரம் மேனஜர் பதவி வேண்டாம் என்று சொல்லி அழுகிறார்.
"என்ன மன்னிச்சிடுங்க பிக் பாஸ். மேனேஜர் பதவியில் இருந்து என்னால இந்த வீட்டை ஆர்டர்ல கொண்டு வர முடியல. இந்தப் பதவியை ரிசைன் பண்ணிக்கிறேன். நான் இந்தப் பதவியை ரிசைன் பண்ணிருக்கேன் அப்படின்னா அந்த அளவுக்கு காயப்பட்டிருக்கேன்.

இதுதான் நீங்க எனக்கு கொடுத்த மதிப்பு. நான் காமெடியன். விக்கல்ஸ் என்ற பெயரை எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கினேன் தெரியுமா? என்ன நம்பி இங்க ஒரு டீம் இருக்கு. இங்க ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பேசியிருக்கேன். எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க" என மனமுடைந்து அழுகிறார்.


















