செய்திகள் :

BB Tamil 9 Day 31: திவ்யாவின் பதவியைத் தூக்கிய பிக் பாஸ்; முன்னேறிச்செல்லும் வியன்னா

post image

பரவாயில்லை. மூழகப் போகும் கப்பல், மீட்கப்படுவதற்கான மெல்லிய அடையாளம் தெரிவது போல, ஹோட்டல் டாஸ்க் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாக இருக்கிறது. இப்படியே பிக்அப் ஆனால் இந்த சீசன் பிழைக்கக்கூடிய சாத்தியம் அதிகம்.

பாரு, திவாகர் போன்ற நெகட்டிவிட்டி எனர்ஜிகளால்தான் இந்த சீசன் நகர்கிறது என்கிற அவப்பெயர் மாற வேண்டும். சபரி, வினோத் செய்த காமெடிகள் இந்த எபிசோடில் சுவாரசியமாக இருந்தன. 

BB TAMIL 9: DAY 31
BB TAMIL 9: DAY 31

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 31

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தானும் ஹீரோ ஆகி விடும் முயற்சியில் ‘டேமேஜ் ஆன பிஸூ நானு.. ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’ என்று பாடிக் கொண்டிருந்தார் திவாகர். மனிதர் இப்போதெல்லாம் பாருவை விட்டு விட்டு வியன்னா பின்னால்தான் சுற்றுகிறார்.

“உங்களை வெச்சு கிண்டல் பண்றாங்க” என்று வியன்னா அனுதாபத்துடன் முன்பு சொன்னதால் ஏற்பட்ட நட்பு போல. (தமிழக மக்களை வெச்சு திவாகர் பண்ற கிண்டலையும் கண்டிக்கலாமே மேடம்?!). 

“என் நடிப்பு அருமை இவங்களுக்குப் புரியலை. பைத்தியங்க” என்கிற மாதிரி திவாகர் புறணி பேச, சரியாக அந்தச் சமயத்தில் கிராஸ் ஆன பிரஜின் “யாரைச் சொல்றே.. நேரா மோது.. பிச்சிப்புடுவேன்” என்று துடைப்பத்தை நீட்டி எச்சரித்தார். 

இந்தப் பஞ்சாயத்து பெரிதாக, சத்தம் தாங்காமல் உள்ளே இருந்த விருந்தினர்கள் காதைப் பொத்திக்கொண்டார்கள். “வாங்க. வெளில போய் பேசலாம்” என்று ‘தல’ திவ்யா மல்லுக்கட்டினாலும் யாரும் கேட்பதாக இல்லை. வழக்கம்போல பாருவிற்கும் திவ்யாவிற்கும் முட்டிக் கொண்டது. “நீதான்.. இல்ல.. நீதான்.. உன்னை நீயே கண்ணாடில பாரு” என்று அடித்துக்கொண்டார்கள். 

“பாரு செய்யறதையெல்லாம் நார்மலைஸ் பண்ணி. ‘அவ அப்படித்தான்’ன்னு விட்டுடறாங்க.. என்னால அப்படி விடமுடியாது. கத்தினா கன்டென்ட்ன்னு நெனச்சுக்கறா. எல்லா புரொமோலயும் அவ வர்ற சீன்தான் வருது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று சுபிக்ஷா மற்றும் வியன்னாவிடம் எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருந்தார் திவ்யா.

BB TAMIL 9: DAY 31
BB TAMIL 9: DAY 31

“வேலை செய்யாதவனுக்கு ஃபேனைப் போடு” - பாரு டெக்னிக்

நடைமுறையிலும் இதைப் பார்க்கலாம். அடாவடி ஆசாமிகள் செய்யும் பெரிய தவறுகளைக்கூட கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். “அவன்..அப்படித்தான். தெரியாதா?’ என்று அதை நார்மலைஸ் செய்து விடுவார்கள். ஆனால் அதே சமயத்தில் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருப்பவன் சறுக்கி விழும் சிறுதவறுகளைக் கூட பூதாகரப்படுத்தி தண்டனை வழங்கி கெட்ட பெயர் தருவார்கள். “வேலை செய்யாதவனுக்கு ஃபேனைப் போடு. வேலை செய்யறவனுக்கு கூடுதல் வேலை கொடு” என்பது அரசாங்க அலுவலக பழமொழி. 

நாள் 31. ‘நா ரெடி தா வரவா…. அண்ணன் நா இறங்கி வரவா…தேள் கொடுக்கு

சிங்கத்த சீண்டாதப்பா….எவன் தடுத்தும்…. என் ரூட்டு மாறதப்பா…’ என்று விஜய் பாடும் பாடலை காலையில் அலற விட்டுக் கொண்டிருந்தார் பிக் பாஸ். (டிவிகே ஆளா இருப்பாரோ?!)  எஃப்ஜே தூங்க நாய் குலைத்தது. 

“இது 24x7 டாஸ்க்ன்றதை மறந்துட்டாங்கபோல. ஒரே சத்தமா இருக்கு” என்று விருந்தினர்கள் சொல்ல “யாரு என்ன வேலைன்றது குழப்பமா ஆயிட்டாங்க” என்று திவ்யா பணிவுடன் சொல்ல “நீங்கதானே மேனேஜர்.. அப்ப நீங்கதான் இதை மேனேஜ் பண்ணணும். வேலை வாங்கறதுதான்.. உங்க வேலை..ஹோட்டல் ஒழுங்கா நடக்கணும். அப்பத்தானே அடுத்த முறை நாங்க வர முடியும்?” என்று தீபக்கும் மஞ்சரியும் புகார் சொன்னார்கள். 

“என்ன பண்றீங்க.. எல்லோரும்.. உங்களால நான் திட்டு வாங்கறேன். எல்லோரும் யூனிபார்ம்ல அஞ்சு நிமிஷத்துல இங்க இருக்கணும்” என்று திவ்யா டென்ஷன் ஆகி கத்த, அதுவரை பிள்ளைப் பூச்சியாக இருந்த துஷாருக்குக்கூட கோபம் வந்தது. “நான் குளிச்சுட்டுதான் வருவேன்” என்று அடம்பிடிக்க இருவருக்கும் வாக்குவாதம். “என்னால இனிமேல் அமைதியா இருக்க முடியாது” என்று துஷார் கோபத்துடன் சொல்ல “இத்தனை நாள் அப்படித்தானே இருந்தே?” என்று திவ்யா இடக்காக கேட்டது, சண்டைக்கு நடுவிலும் ஒரு நல்ல காமெடி. 

BB TAMIL 9: DAY 31
BB TAMIL 9: DAY 31

‘நான் வளர்கிறேனே மம்மி’ - முன்னேறிச் செல்லும்  வியன்னா

விருந்தினர்கள், ஹோட்டல் பணியாளர்களுக்கு ஸ்டார்கள் தரும் நேரம். “ஆஹா.. ஓஹோன்னீங்க.. பெயர்ல மட்டும் இருந்தா போதுமா.. ஒண்ணும் சரியில்ல. யாரும் ஒழுங்கா வேலை பார்க்கலை. யார் கூடயும் எங்களால கனெக்ட் ஆக முடியலை” என்று விருந்தினர்கள் புகார் சொன்னார்கள். என்றாலும் சிறந்த சேவையை அளித்த பிரவீன், சுபிக்ஷா, வியன்னா ஆகிய மூவருக்கும் ஸ்டார் கிடைத்தது. 


‘எப்படியும் சில நாட்களில் வெளியேறி விடுவார்’ என்று கருதப்படும் அளவிற்கு சுமாராக விளையாடிய வியன்னா, ‘நான் வளர்கிறேனே மம்மி’ கதையாக, இப்போது மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறார். மக்கள் டைட்டிலை தூக்கித் தந்தாலும் கூட ஆச்சரியமில்லை. (கொஞ்சி கொஞ்சி க்யூட்டா பேசுதுல்ல!) 

சேவை சரியாக இல்லாததால், விருந்தினர்களில் ஒருவரான பிரியங்கா செக்-அவுட் செய்ய விரும்புகிறாராம். ஆனால் மறுபடியும் இதே ஹோட்டலுக்கு வருவாராம். (என்னடங்கடா பித்தலாட்டமா இருக்கு. பக்கத்துல செட்ல சூப்பர் சிங்கர் எபிசோடுக்கு போயிட்டு வருவாங்க போல!) 

“வட சூடா போட்டுட்டு இருக்காங்க. சாப்பிட்டுட்டு கிளம்பட்டுமா?” என்று அனுமதி வாங்கிக் கொண்டார் பிரியங்கா. துஷார் கையில் முத்தமிட ராஜமரியாதையுடன் அவரை வழியனுப்பி வைத்தார்கள். 

BB TAMIL 9: DAY 31

சிலையாக இருந்தாலும் செமையாக காமெடி செய்த சபரி 

ஓவராக ஆடினால் வீக்கெண்ட் பஞ்சாயத்தில் வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும் என்று பாருவிற்குள் தோன்றிவிட்டதோ, என்னமோ, “நாம் ரெண்டு பேரும் டீமா வேலை செய்யும் போது நல்லாயிருக்கல்ல?” என்று அவர் திவ்யாவிடம் கேட்க “இல்ல.. எனக்கு திருப்தியாவே இல்ல. பதிலுக்குப் பதில் பேசி கடுப்பேத்தறீங்க. இங்க நாம கேம் ஆடத்தான் வந்திருக்கோம். பர்சனல் ஒண்ணுமே இல்ல” என்று கடுகடுத்தார் திவ்யா. 

“அப்படி என்ன என்கிட்ட குறை.. பாஸ் என்ன நான் மாத்திக்கணும்?” என்று பாரு கேட்க “உன்னையே பிக் பாஸ்ல இருந்து மாத்தினா நல்லாத்தான் இருக்கும்’ என்பது திவ்யாவின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம். 

“பாருங்க. சார். பாருங்க சார். ஒருவாட்டி ஜோரா கைத்தட்டுங்க. இது ரோபோ சிலை சார். அஞ்சு செகண்டுக்கு ஒரு முறை போஸ் மார்றா மாதிரி ப்ரோக்ராம் செஞ்சு வெச்சிருக்கோம்” என்று விக்ரம் சொல்ல, அதற்கேற்ப விதம் விதமான சேஷ்டை கோணங்களில் சபரி போஸ் தந்தது நல்ல காமெடி. 

விருந்தினர்கள் புகார் சொன்னதால் மறுபடியும் கோபத்தின் உச்சிக்கே சென்ற திவ்யா, ‘கம் டூ மை டேபிள்” என்று ஊழியர்களிடம் சத்தம் போட்டார். “எவ்ளோ சொன்னாலும் கேக்கவே மாட்றீங்க..” என்று அவர் சலித்துக்கொள்ள, பிக் பாஸிற்கும் அதே சலிப்பு வந்து மேனேஜர் போஸ்ட்டை மாற்ற முடிவு செய்தார். பாருவிற்குள் ஜிலீர் என்றிருக்கும். தனக்குத்தான் மேனேஜர் போஸ்ட் என்று நினைத்திருப்பாரோ, என்னமோ. 

BB TAMIL 9: DAY 31

திவ்யாவின் மேனேஜர் பதவியைத் தூக்கிய பிக் பாஸ்

திவ்யாவிற்கு பதிலாக யார் மேனேஜர் ஆகலாம் என்பதை அனைவரும் தேர்வு செய்து சொல்ல வேண்டும். ‘ரொம்ப ஓவரா ஆடறாங்க.. கத்தறாங்க.. ரூடா இருக்காங்க’ என்று திவ்யாவை பழித்த மக்கள் அதற்குப் பதிலாக விக்ரமை தேர்ந்தெடுத்தது நல்ல சாய்ஸ். ஏறத்தாழ அனைவரிடமும் இணக்கமாகப் பழகும் விக்ரம், குறைகளைக்கூட காமெடி கலந்து வலிக்காமல் சொல்வார். சாண்ட்ராவும் பிரவீனும் மட்டுமே ‘அஸிஸ்டெண்ட் மானேஜர் பாரு’ செய்த அடாவடிகளை சொன்னார்கள். 

‘Asst Manager’ பதவியில் பாரு நீடிப்பார் என்று பிக் பாஸ் சொன்னதும் அம்மணிக்கு வாயெல்லாம் பல். பாருவோடு ஒப்பிடும் போது திவ்யா அத்தனை மோசமில்லை. இறங்கி வேலை செய்கிறார். ஆனால் சிடுசிடுப்பாக இருப்பதுதான் அவரது மைனஸ். சண்டி மாடுகளை மேய்க்க முடியாமல் எளிதில் கோபப்பட்டு விடுகிறார்.

‘லன்ச் ரெடியா?’ என்று விருந்தினர்கள் கேட்க “V for வியன்னா வஞ்சிரம் ஃபிரை” என்றெல்லாம் சொல்லி அவர்களை இம்ப்ரஸ் செய்ய முயன்று கொண்டிருந்தார் வியன்னா. வினோத் பாட்டுப் பாட, ‘எனக்கு எல்லா பெண்களும் ஓகே.. திவ்யா கூட ஓகே’ என்று திவாகர் சொன்ன கமெண்ட் ரசிக்கத்தக்கதாக இல்லை. 

“ஸாரி.. நான் முதல்ல எழுந்து பாரு பெயரைச் சொல்லியிருந்தா.. மத்தவங்க அதை ஃபாலோ பண்ணியிருப்பாங்க” என்று திவ்யாவிடம் சாண்ட்ரா சொல்ல “அதெல்லாம் கிடையாது. நம்ம மூணு பேரையும் கார்னர் பண்ண டிரை பண்றாங்க.. இப்ப பாரு.. விக்ரம் மேனேஜ்மென்ட்ல ஒழுங்கா வேலை செஞ்சாங்கன்னா.. தெரிஞ்சுடும்”  என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் திவ்யா. 

மனித குலத்தில் உருவாகிற பிரிவினை வாதங்களும் இப்படித்தான். தங்களுக்குள் அடித்துக் கொள்கிற இரு குழுக்கள், பொது எதிரி வந்ததும் ஒன்றாக இணைந்து கொள்ளும். அதுவரை பிக் பாஸ் வீடு, சூப்பர் வீடு என்று இரு அணிகளாக அடித்துக் கொண்டிருந்தவர்கள், வைல்ட் கார்ட் என்ட்ரிகள் வந்ததும் ஒன்றாக இணைந்து அவர்களை எதிர்க்கிறார்கள். 

BB TAMIL 9: DAY 31

சாண்ட்ராவிற்கு தரப்பட்ட சீக்ரெட் டாஸ்க்

‘இப்படியே போனால் பிக் பாஸ் ஷோவும் ‘ஆஹா ஓஹோ ஓட்டல்’ மாதிரி படுத்து விடும் என்று பிக் பாஸ் நினைத்தாரோ என்னமோ, சாண்ட்ராவை அழைத்து சீக்ரெட் டாஸ்க் தந்தார். இவர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து, யாரையாவது பதவியில் இருந்து ரிசைன் செய்ய வைக்க வேண்டும், அல்லது பதவி மாற்றம் செய்ய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் என்கிற பிஸ்கெட் கிடைக்கும். இந்த டாஸ்க்கில் தோற்றால் இவர்களே எவிக்ஷன் பிராசஸில் நேரடியாக இணைக்கப்படுவார்கள். 

நம்பிக்கைக்கு உரிய நபராக சாண்ட்ரா யாரைத் தேடுவார்? யெஸ்.. அதேதான். தன் கணவர் பிரஜினை ரகசியமாக சந்தித்து ‘இந்த மாதிரி.. இந்த மாதிரி’ என்று விஷயத்தைக் கூற, அவரோ “அப்ப யாரை பார்ட்னரா சேத்துக்கப் போறே?” என்று வெள்ளந்தியாக கேட்க “உன்னைத்தாண்டா பேக்கு” என்று சாண்ட்ரா சொன்னது சுவாரசியமான காட்சி. பிறகு இருவரும் மலையாளத்திலும் சம்சரித்துக் கொண்டார்கள். 

சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க் என்னவாகும்? ‘ஆஹா ஓஹோ ஹோட்டல் எப்போது நிரந்தமாக மூடப்படும்?” போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய சற்று பொறுத்திருக்க வேண்டும். 

BB Tamil 9: ``உனக்கு மேனஸ் இல்லையா?'' - துஷாரிடம் மோதும் திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: `இந்த டாஸ்க்கில கொடுக்கப்படும் ஸ்டார் எனக்கு வேணாம்' - திவ்யா சபரி மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: 'ரொம்ப கடுமையா நடந்துக்குறாங்க' - திவ்யாவை குற்றம் சாட்டும் ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

``ரங்கராஜ் சொல்றதை காமெடியா எடுத்துக்கலாம்" - மகளிர் ஆணைய தலைவர் குமாரி

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம் இப்போதைக்கு ஓயாதுபோல.'தன்னைத் திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர... மேலும் பார்க்க

BB Tamil 9: வீட்டை எதிர்த்து கல்யாணம், மனைவியின் வைராக்கியம், பிரவீன் பிக்பாஸ் சென்றது ஏன்?

இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தோற்றுவிடும்போல! அந்த‌ளவுக்கு கூச்சலும் சத்தமுமாக தினமும் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல்.20 போட்டியாளர்களுடன் அக்ட... மேலும் பார்க்க

BB Tamil 9: "28 நாள் பேசாத துஷார் இன்னைக்கு ஏன் பேசுறாரு"- திவ்யா கணேஷ் காட்டம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க