மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட...
`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி, அந்தப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டியிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் காயமடைந்தார்.
அதனால், மீண்டும் கேப்டன் பதவியைத் தொடர்ந்தார் தோனி. அதே நேரம் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே அணி, டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து தோனி ஓய்வை அறிவிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தோனி, ``2026-ம் ஆண்டில் என் உடல்நிலையைப் பொறுத்து அப்போது முடிவெடுப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி சிஎஸ்கே அணி ரசிகர்களிடம் பெரும் விவாதமானது.
இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ``தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவில்லை. அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது எனக்குத் தெரியாது.
அவரிடம் வேண்டுமானால் கேட்டுவந்து சொல்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஒருசில வாரங்களில் ஐபிஎல் ஏலம் நடக்கவிருக்கும் நிலையில், சிஎஸ்கே செயல் அதிகாரியின் இந்த வார்த்தைகள் தோனி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.




















