'எந்த ஃபைலை தேடி கொடநாடு சென்றார்கள்?' - எடப்பாடியை சாடிய டிடிவி தினகரன்
மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிறிஸ்டில்டாவை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை அவருடையது தான் என்று ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் ”இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்ததாகவும், தனிப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வைத்து ஜாய் மிரட்டியதால் இந்த திருமணத்தை செய்து கொண்டதாகவும், டிஎன்ஏ பரிசோதனையில் அந்த குழந்தை தன்னுடையது என்று உறுதி செய்யப்பட்டால் அந்த குழந்தையின் செலவை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்வதாகவும்” தெரிவித்திருந்தார்.
இப்படி ஒரு பதிவை பதிவிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிறிஸ்டில்டா டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும், மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா? என்றும் கேள்வி கேட்டார்.
இந்த நிலையில் ஜாய் கிறிஸ்டில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?
— Joy Crizildaa (@joy_stylist) November 6, 2025
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?
கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி
This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBs
இதில் “ஏய் பொண்டாட்டி..நீ எவ்ளோ அழகு தெரியுமா? அவ்ளோ அழகு. லவ் யூ, சீக்கிரம் வந்துரு மிஸ் பண்றேன். மிஸ் யூ, ரெடி ஆயிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பதிவின் கேப்ஷனில் “இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? Mr husband Madhampatty Rangaraj
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க - இதுல லவ் ல பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி, இந்த மெசேஜை என் கணவர் நான் வெளியூரில் இருந்த போது அனுப்பி இருந்தார். எப்போதும் நாங்கள் ஒன்றாக இல்லாத நேரத்தில் என்னென்ன செய்கிறார் என்பதை இப்படி வீடியோவாக டெய்லி அப்டேட்டாக அனுப்புவார் " என்று ஜாய் கிறிஸ்டில்டா அதில் பதிவிட்டிருக்கிறார்.





















