வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை...
பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்
சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.
லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் காதலியிடம் இருந்து 10,000 யுவான் (சுமார் ₹1.24 லட்சம்) கடனாகப் பெற்றிருந்தார். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக, அவரைத் தேடி வருகிறார்.
1991 ஆம் ஆண்டில் லீயும், மாவும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தபோது சந்தித்திருக்கின்றனர். அப்போது லீக்கு 23 வயது, மாவுக்கு 25 வயது. மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் எட்டு ஆண்டுகள் காதலித்திருக்கின்றனர்.

லீயின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், லீ தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சுமுகமாகப் பிரிந்தனர்.
பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு லீ சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்தபோது, அவருக்குப் பண உதவி தேவைப்பட்டது.
அப்போது அவரது முன்னாள் காதலியான மா, எந்தத் தயக்கமும் இன்றி 10,000 யுவான் பணத்தை அவருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரிய தொகையாகக் கருதப்பட்டது என்று லீ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பணம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, லீ தனது மொபைல் போனைத் தொலைத்ததால், மாவின் தொடர்பு எண்ணை இழந்தார்.
அன்று முதல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்போது "சியோலி ஹெல்ப்ஸ் யூ" என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியுடன் மாவைத் தேடி வருகிறார். இந்த தேடுதல் முயற்சிக்கு லீயின் மனைவியும் ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

















